துரைமுருகனுக்கு பதிலடி.. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து விளக்கம்.. - கமல் பரபர பேட்டி
Recommended Video

சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து ராகுல்காந்தியுடன் நான் எதையும் பேசவில்லை என்று கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசன் டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். இதுகுறித்து திருநாவுக்கரசர் கூறுகையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு கூட்டணி வரும் கமலுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவையானவை
இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில் மக்களை நான் சந்தித்து வருவது ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள அல்ல. நல்ல வேளையாக நான் நடிகன் என்பதால் அவர்களுக்கு என்னை தெரியும். தற்போதைய சுற்றுப்பயணங்களில் மக்களுக்கு தேவையானவை குறித்து பட்டியலிட்டு வருகிறோம்.

எந்த கருத்தும்
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை. சபரிமலை குறித்து ரஜினி கருத்தை கேட்கிறீர்கள். சபரிமலைக்கு நான் செல்லாததால் பக்தர்கள் உணர்வு குறித்து எனக்கு தெரியாது. அதனால் பக்தர்கள் தரப்பு குறித்து நான் எந்த கருத்தையும் கூற முடியாது.

பேசவில்லை
காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது. ராகுலை சந்தித்த போது கூட்டணி குறித்து நான் எதையும் பேசவில்லை.

துரைமுருகன் நடிப்பு பிடிக்காது
எனது நடிப்பு பிடிக்கும் ஆனால் அரசியல் அனுபவம் போதாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால் எனக்கு துரைமுருகன் நடிப்பே பிடிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் கமல்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications