சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாதியோடு ஒப்பிடுவது எனக்கு பிடிக்காது.. மயிலாப்பூரில் போட்டியிடாதது ஏன்.. கமல் பரபரப்பு விளக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டால் ஜாதியோடு என்னை இணைத்து சொல்லிவிடுவார்கள், அது எனக்கு பிடிக்காத விஷயம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் 130 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. கமல்ஹாசன் மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து கமல்ஹாசன் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் 3.7 சதவீத வாக்குகளை பெற்றிருந்தோம்.

மொத்தமாக மொத்தமாக "முடிக்க" பிளான்.. திமுகவிற்கு எதிராக அமித் ஷா கொடுத்த பெரிய டாஸ்க்.. சரிய போகும் சீட்டுகள்

பகுப்பாய்வு

பகுப்பாய்வு

ஆனால் இந்த தேர்தலில் அதை ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்ய முடியாது. ஏனென்றால் இது போன்ற ஆய்வுகள் தவறாக போகக் கூடும். மக்களிடத்தில் இருந்து வரும் ஈர்ப்பு, எதிர்வினைகள் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். மக்களிடம் இருந்து எங்களுக்கு புதிய ஆதரவு அலை கிடைத்து வருகிறது.

வெற்றி

வெற்றி

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் அரசியலில் புதியவர்களாக இருந்தோம். இப்போது அப்படியில்லை. பலவற்றை சரி செய்துள்ளோம். நாங்கள் ஒரு எண்ணிக்கையை கொடுத்தால் அது மூன்றாக உருவாக வேண்டும். அதுதான் வெற்றி. அந்த வெற்றியை அடைய நாங்கள் விரும்புகிறோம்.

விளையாட்டு

விளையாட்டு

10 சதவீதத்திற்கு மேல் நாங்களஅ ஆதரவுகளை பெற்றால் நாங்கள் இந்த விளையாட்டில் இருக்கிறோம் என ஆய்வாளர்கள் சொல்லலாம். நாங்கள் விளையாட்டில் இருப்பதை மட்டுமே விரும்பவில்லை. இந்த விளையாட்டிலேயே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அரசியலில் செயல்படுவது என்பது சவாலான விஷயம். சினிமா துறையில் நான் பல விஷயங்களை சாதித்து இருக்கிறேன்.

Recommended Video

    ம.நீ.ம வேட்பாளரும் அக்கட்சியின் தலைமை நிலைய பரப்புரையாளருமான அனுஷா ரவி பேட்டி
    போட்டி

    போட்டி

    அரசியலிலும் வெல்வேன். ஆனால் அது எளிதான விஷயம் அல்ல. நான் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என ஆலோசனைகள் வந்தது. ஆனால் அங்கு போட்டியிட்டால் அதை சாதியோடு இணைத்து சொல்லி விடுவார்கள். சாதியோடு ஒப்பிடுவது எனக்கு பிடிக்காத வி‌ஷயம். எனவேதான் நான் கோவையை தேர்வு செய்தேன். இந்த மண் மத ஒற்றுமையின் விளையாட்டு மைதானமாக இருக்கிறது என்றார் கமல்ஹாசன்.

    English summary
    MNM President Kamal Haasan says why he is not contested in Mylapore assembly constituency?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X