இணையத்தில் லீக்கான கமல்ஹாசனின் தக் லைப்.. அதிர்ந்துபோன படக்குழு.. முதல் நாளே இப்படியா!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் லீக்காகி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், படம் இணையத்தில் லீக்கானது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தக் லைஃப் ரிலீஸ்
அதற்கேற்ப இன்று காலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். கர்நாடகாவில் ரிலீஸாகவில்லை என்றாலும், பெங்களூரில் உள்ள தமிழக ரசிகர்கள் பலரும் ஓசூரில் உள்ள திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டின் திரையரங்குகள் காலையில் திருவிழாவை போல் மாறியது.
முத்த மழை எங்கயா?
காலை முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், முதல் பாதி சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. ஆனால் 2ஆம் பாதியில் படம் கொஞ்சம் சறுக்கிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறினர். டெக்னிக்கலாக சிறப்பாக வந்துள்ளதாக விமர்சிக்கப்பட்ட சூழலில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முத்த மழை பாடல் படத்திலேயே இல்லை என்பது தெரிய வந்தது.
லீக்கான தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே மிகவும் சுமாரான படமாக தக் லைஃப் வந்திருப்பதாகவும் சில விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும் படத்தின் வசூலில் பெரிய பாதிப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படம் இணையத்தில் லீக்காகி இருப்பது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை ஐகோர்ட்
தக் லைஃப் படம் ரிலீஸாவதற்கு 2 நாட்கள் முன்பாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவான தக் லைஃப் திரைப்படம் இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும். இதனால் தக் லைஃப் திரைப்படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
படக்குழு அதிர்ச்சி
இதன்பின் சென்னை உயர்நீதிமன்றம், தக் லைஃப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்ததோடு, உரிய நடவடிக்கை எடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. தற்போது சென்னை ஐகோர்ட் உத்தரவையும் மீறி தக் லைஃப் படம் இணையதளங்களில் லீக்காகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications