தமிழ் மக்களை வெளிச்சத்திற்கு இட்டு செல்வேன்.. "டார்ச்லைட்" அடித்து... சிம்பாலிக்காக சொன்ன கமல்!
சென்னை: இருண்டு கிடக்கும் தமிழகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர நான் இருக்கிறேன் என்பதை சிம்பாளிக்காக காட்ட பிக்பாஸ் போட்டியாளர்களை இருட்டில் இருந்து டார்ச் அடித்து அழைத்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டார். இருண்டு கிடக்கும் தமிழகத்தை வெளிச்சத்திற்கு அழைத்து வர இது உதவும் என்பதை போல் சின்னம் சிம்பாளிக்காக கூறுவதால் கமல் மகிழ்ந்தார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலிலும் இந்த சின்னமே வேண்டும் என விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த சின்னத்தை வேறு ஒரு அமைப்பு பதிவு செய்து விட்டதால் கமல் கட்சிக்கு வேறு ஒரு சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

சின்னம்
ஆனால் டார்ச்லைட் சின்னம் வைத்திருந்த அமைப்பு திடீரென தனக்கு அந்த சின்னம் வேண்டாம் என கூறிவிட்டது. இதையடுத்து கமல்ஹாசன் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் கிடைத்துள்ளது. இதனால் கமல்ஹாசன் புத்துணர்ச்சியுடன் தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வந்தார்.

கோர்த்த கைகள்
அது போல் அவரது கட்சியின் சின்னமான கோர்த்த கைகளும், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் இறுதி போட்டியாளரை அறிவிக்கும் நிகழ்வு நசரத்பேட்டையில் உள்ள ஒரு அரங்கில் நடைபெற்றது.

விளக்குகள் அணைப்பு
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக தங்கியிருக்கும் போட்டியாளர்களை கமல்ஹாசன் அழைத்து கொண்டு மேடைக்கு வருவது வழக்கம். அது போல் வீட்டில் கடைசியாக தங்கியிருந்த பாலாஜியையும் ஆரியையும் கமல்ஹாசன் அழைத்து கொண்டு வர பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அப்போது பிக்பாஸ் வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டது.

வெளிச்சம்
அந்த சமயம் கமல் விளக்குகள் அணைத்து விட்டதால் இருட்டாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம் என கூறிக் கொண்டே தனது கையில் இருந்த டார்ச்லைட்டை ஆன் செய்து அந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து சென்றார். இது பார்ப்பதற்கு இருண்டு கிடந்த தமிழகத்தையும் இதே போல் வெளிச்சத்திற்கு அழைத்து செல்ல நான் இருக்கிறேன் என கமல் சொல்லாமல் சொன்னது போல் இருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications