சினிமாவை போல் அரசியலிலும் விஸ்வரூபம் எடுக்கும் கமல்.. சொன்னபடி நின்னு அடிப்பாரோ!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சரியாக பார்த்து பார்த்து செயல்படும் மக்கள் நீதி மய்யம்- வீடியோ

    சென்னை: கமல் திரைப்படம் என்றாலே புதுமைக்கும் பிரம்மாண்டத்துக்கும் அதிரடிக்கும் பஞ்சம் இருக்காது என்பர். அது அரசியலுக்கு பொருந்துகிறது.

    கட்சி தொடங்குவதற்கு முன் எந்த அளவுக்கு மத்திய- மாநில அரசை எதிர்த்தாரோ அதை விட 100 மடங்கு தற்போது எதிர்க்கிறார், விமர்சிக்கிறார், சவால் விடுகிறார்.

    மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று நெல்லையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கமல்ஹாசன் ஆற்றிய உரை இருக்கே அப்பப்பா. என்னா பேச்சு என்னா பேச்சு!

    திருப்பி கொடுக்கும் நேரம்

    திருப்பி கொடுக்கும் நேரம்

    அவர் பேசுகையில் அல்வாவுக்கு பெயர் போனது நெல்லை. இத்தனை நாட்களாக இந்த ஊர் மக்களுக்கு அரசியல் கட்சிகள் அல்வா கொடுத்து கொண்டிருந்தன. ஆனால் வரும் தேர்தலில் நீங்கள் அல்வா கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றார்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    ஒத்த கருத்துடைய கட்சிகளை கூட்டணி அழைத்துள்ளார் கமல். இந்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கமல்ஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் எழுந்துள்ளன.

    என்னா கூட்டம்

    என்னா கூட்டம்

    நெல்லையில் மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் சில கட்சிகளும் மற்ற கூட்டணியிலிருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் சேரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திமுக, அதிமுகவுக்கு கடும் போட்டியாக கமலின் மக்கள் நீதி மய்யம் இருக்கும் என தெரிகிறது.

    கட்சியினர்தான் இல்லை

    கட்சியினர்தான் இல்லை

    பொதுவாக ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் ஒன்று சுயேச்சையாக போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரு கட்சியில் இணைந்து அவர்களாக பார்த்து சீட் கொடுத்தால்தான் உண்டு. ஆனால் கமல்ஹாசன் நேற்று அறிவிக்கையில், எங்கள் கட்சி சார்பில் போட்டியிட கட்சியினர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் விருப்ப மனு கொடுக்கலாம் என்றார்.

    நிலைப்பாடு மாற வேண்டும்

    நிலைப்பாடு மாற வேண்டும்

    அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இளம் வயது முதல் 60 வரை ஒருவரே சமஉவாகவும், எம்பியாகவும் இருப்பது என்பது தற்போது வரை நீடிக்கிறது. தந்தை, மகன் என அடுத்தடுத்து ஒரு குடும்பத்தினருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கும் நிலைப்பாடு மாற வேண்டும். எனவே தன் பதில்கள், விமர்சனங்கள் மூலம் அரசியலிலும் கமல்ஹாசன் விஸ்வரூபம் எடுத்துள்ளார் என்பதே நிதர்சனம். அவர் சொன்னது போல் நின்னு அடிப்பாரோ!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+