சந்துருனு ஒரு மானஸ்தன்.. டிவியை உடைச்சது ஒரு எம்பி சீட்டுக்கா? மநீம கமலை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: திமுக கூட்டணியில் தற்போது இருக்கும் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விரைவில் மாநிலங்களவை எம்பியாக தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த காலங்களில் திமுகவை குறிப்பாக அதன் தலைவர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்த கமலஹாசன் தற்போது அவரது தயவிலேயே மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நிலையில், இதற்காகவா டிவியை எல்லாம் உடைத்தீர்கள் என விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.
சமகால நடிப்புப் பல்கலைக் கழகம் என்றால் அது நிச்சயம் நடிகர் கமல்ஹாசன் என கண்ணை மூடிக் கொண்டு கைகாட்டி விடலாம். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது திரை பயணம், நடன உதவியாளர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல்வேறு பரிணாமங்களை தாண்டி பயணித்து வருகிறது.

5 தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் ஆண்டவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அரசியல் எனும் மேக்கப் போட்டார் கமல்ஹாசன். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம்.
சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார். இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ் உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியலுக்கு களத்திற்கு தேவையான எதையும் கமல்ஹாசன் மேற்கொள்ளாததால் கட்சி மாவட்டச் செயலாளர்கள் சோர்வடைந்துள்ளனர். கீழ்மட்ட நிர்வாகிகள் கட்சியில் இருக்கிறோமா இல்லையா என்பது கூட தெரியாமல் இருக்கும் நிலையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என குழம்பிப் போயிருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் உடன் நெருக்கம் காட்டிய கமலஹாசன், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், அந்த தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 தொகுதிகளில் பிரசாரம் மட்டுமே மேற்கொண்டார். இந்நிலையில் அப்போதைய பேச்சுவார்த்தையின்படி மநீமவுக்கு மாநிலங்களவை எம்பி வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தலில் திமுக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அதற்குப் பிறகு கமலஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. பொது பிரச்சனைகளில் கூட ட்விட்டர் அரசியல் கூட செய்யவில்லை. அவருக்கு பிறகு வந்த விஜய் நாள்தோறும் தலைப்புச் செய்தியாகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் என்னவாக போகிறது என்ற குழப்பம் எழுந்தது. இந்த நிலையில் தான் ஏற்கனவே செய்து கொண்ட உடன்படிக்கையின்படி கமலஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்புகளும் வெளியாகலாம்.
I still can’t stand Kamal Haasan’s betrayal. But is it a waste of my time to write about him anymore?
— Dr. Praveen Kumar (@DrPraveenwrites) March 10, 2024
I vividly remember several first-time voters, especially college students rooting for Kamal Haasan’s party in 2019 and he secured close to 4%!
Their argument was Kamal is… pic.twitter.com/c343qwjvEn
இந்நிலையில் கமல்ஹாசனை தற்போது மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். கட்சி ஆரம்பித்தபோது பாஜக, திமுக, அதிமுக என கலந்து கட்டி விமர்சனக் கணைகளை கொடுத்து அவர், திமுக என்றால் ஒரு படி மேலே போய் தான் விமர்சித்தார். உதாரணத்திற்கு தொலைக்காட்சியை பார்க்கும் போது இடையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் பேசும்போது கோபம் அடைவது, எச்.ராஜா பேசியவுடன் ரிமோட்டை விட்டு டிவியை உடைத்தது என மாஸ் காட்டினார்.
அதற்குப் பிறகு கலைஞரை கேவலப்படுத்த வீல் சேர் என சொல்ல தேவையில்லை, ஸ்டாலின் என சொன்னாலே போதும் என்றது, ஒரு கூட்டத்திலோ ஊழல் செய்பவர்களுக்காக நான் வரவில்லை. அப்படி ஊழல் செய்பவர்கள் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் யாராவது இருந்தால் கதவு திறக்கப்படும் வெளியே போங்கள் என திரைப்பட பாணியில் வசனம் பேசி சில்லறைகளை சிதறவிட்டார்.
இப்படியாக தொடர்ந்து திமுக எதிர்ப்பு பாதையில் பயணித்து வந்த கமலஹாசன் தற்போது ஒரேடியாக திமுகவிடம் சரணாகதியாகி விட்டார். ஏற்கனவே கமலஹாசனிடம் இருந்து விலகிய பத்மப்பிரியா, மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், கமலஹாசன் திமுகவிலேயே இணைந்து விடலாம் அதற்கு எதற்கு கட்சி எனக் கேட்கின்றனர்.

இத்தனை நாள் அரசியல் என்ற பெயரில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளையும் விமர்சித்து வந்த கமலஹாசன் மாற்று அரசியல், மய்யம் அரசியல் என பேசி தற்போது மற்ற கட்சிகளைப் போலவே அவரும் ஆளும் கட்சியுடன் ஐக்கியமாகிவிட்டார் எனவும், 'சந்துரு என ஒரு மானஸ்தன் இருந்தான்' என அவரது இந்தியன் பட டயலாக்கை வைத்து அவரை விமர்சித்து வருகின்றனர்.
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications