10 நாட்களில் பதவி ஏற்கிறார் கமல்ஹாசன்.. 25-ந்தேதி பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்பு.. மநீம செம ஹேப்பி
சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகியுள்ள கமல்ஹாசன் ஜூலை 25ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. இதே நாளில்தான், திமுகவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, 6 இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வாகினர்.. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியம் வெளியிட்டிருந்தார்.
சுப்பிரமணியம் அறிவிப்பு
அதில், "மாநிலங்களவைவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால் ஏற்படும் காலியிடங்களுக்கு திமுக சாாபில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.
பதவியேற்பு எப்போது
இதையடுத்து, தேர்வாகியிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எப்போது பதவியேற்க போகிறார்கள் என்ற ஆர்வம் எழுந்தபடியே உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், வரும் 25 ம் தேதி கமல் உட்பட 4 பேருமே எம்.பியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது..
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி துவங்க, ஆகஸ்ட் 12ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே இவர்கள் பொறுப்பை ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலிதான், மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து அறிக்கை வெளியாகியிருக்கிறது..
நாள் குறித்த கமல்ஹாசன்
அந்த அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கமல்ஹாசன், வருகிற 25-ந்தேதி அன்று பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பு
இந்த அறிக்கையானது, மய்ய உறுப்பினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. சினிமாவில் எத்தனையோ சாதனைகளை படைத்துள்ள நடிகர் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகி முதல்முறையாக நாடாளுமன்றம் செல்ல போகிறார்... எனவே, நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் எப்படி செயல்பட போகிறார்? அவரது நாடாளுமன்ற கன்னிப்பேச்சு எப்படி இருக்க போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபடியே உள்ளன.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications