கமல்ஹாசனால் உடைகிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி? அதிமுக, பாஜக குஷி
Recommended Video

சென்னை: திமுகவிடமிருந்து காங்கிரஸை பிரித்து கூட்டணியை உடைக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாதி அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார் கமல்ஹாசன். பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கமல்.
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது தமிழக அரசியல் தலைவர்களில் கமல்ஹாசன் மட்டும் அதில் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

சந்திப்புகள்
இதன்பிறகு, 2வது முறையாக கடந்த ஜூன் 20ம் தேதி ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதோடு, அக்கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புகளை வைத்து பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைக்க போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இந்த சந்திப்புகளின் பின்னணியில் கமல்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர் பேட்டி
இதை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நேற்று அளித்த பேட்டியில், காங்கிரசுடன் இணங்கி செல்ல கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார். ஆனால், திமுகவுடன் கூட்டணி வைக்க கமல் தயாரில்லை என்று மறைமுகமாக கூறிவிட்டார். இங்குதான் புது ட்விஸ்ட் உள்ளது.

லோக்சபா தேர்தல்
ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில்தான் திமுக உள்ளது. ஆனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் விரும்பும் அளவுக்கான தொகுதிகளை திமுக விட்டுத்தராதபட்சத்தில், கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. அப்போது திமுகவை கழற்றிவிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. எனவேதான் திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறும் கமல்ஹாசனை தங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார் திருநாவுக்கரசர்.

திமுக-காங்கிரஸ் விரிசல்
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தது. அக்கட்சி போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியை தழுவியது. காங்கிரசுக்கு அதிக இடங்களை வழங்கி அவற்றை அது வீணடித்ததுதான் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போக முக்கிய காரணமாக அமைந்தது. இதை திமுக பெரிய தலைவர்கள் சுட்டிக்காட்டியதால், காங்கிரஸ் தலைமைக்கு அப்போதிருந்தே திமுக மீது அதிருப்தி நிலவுகிறது. திருநாவுக்கரசர் தலைமையிலான காங்கிரசுடன் திமுக தலைமை ஒட்டுதல் இல்லாமல் உள்ளது. இந்த பிரச்சினைகளை கமலை வைத்து தீர்த்துக்கொள்ள காங். தலைமை திட்டமிடுகிறது. கமல்ஹாசனுக்கும், தேர்தலை சந்திக்க பெரிய துணை ஒன்று தேவை என்பதால், இக்கூட்டணியை விரும்புகிறாராம்.

பின்னணி
திமுகவை பலவீனப்படுத்தும் டெல்லியிலுள்ள சிலரின் முயற்சி கமலுக்கு பின்னணியில் உள்ளதாக திமுக தலைவர்களுக்கு சந்தேகம் உள்ளது. கமல்ஹாசன் அவ்வப்போது சுற்றுப் பயணம் செய்து மக்கள் கூட்டத்தை கூட்டி காங்கிரஸ் தலைமையை கவர்ந்து வருகிறார். கமல் கருத்துக்களுக்கு பாஜக தலைவர்கள் பதில் கொடுத்து அவரின் முக்கியத்துவத்தை அதிகரித்து வருகிறார்கள். எனவே இதெல்லாம் ஒரு கூட்டு சதி என்று திமுகவிலுள்ள சில தலைவர்கள் சந்தேகிப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன. சமீபத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ், திமுக கூட்டணி உடையும் என்று கமல்ஹாசன் கூறியதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் அவர்கள்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications