பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு? போட்டாரு பாருங்க டைமிங்ல கமல்ஹாசன் ஒரு ட்வீட்
சென்னை: பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு? என்ற தலைப்புடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
அதில், கமல்ஹாசன் கூறியுள்ளதாவது: வியக்காதீர், தோழர்களே! மனித நேயம் என்பது விபரீத குணமுள்ளது. வெட்டிக்கொல்லலத் துணியும் சகோதரப் போரில்- புகுந்து தவிர்க்கும் தாய்மையே வெல்லும். அத்தகைய அன்பு வேண்டாமா நமக்கு?
பாவமும் புண்ணியமும் ஒருவரை ஒருவர்- நாம் தின்று கொழுத்த பின், யாமையே யாம் தினல் கேவலம் என்று நாம் உணர்ந்த பின் விடிந்ததால்- உதித்தது இவ்வுலகு.

வீரம் உண்டு
நாம் கற்பித்த நாய்கட்கும் ஒரு தனி வீரமுண்டு. வேங்கைப்புலிக்கும் முதலைக்கும் அது உண்டு. அது சமீப காலத்து சான்றோர் அவையில்- மிருக உறுமலின்று வேற என்ன தோழா? உன்னை நான் சாடுவேன்- என்னை நீ ஏசுவாய். இருப்பினும்- அமர்ந்து நாம் உயிர்பலி தவிர்ப்பதே கடமையாகக் கொண்ட ஒரு குடும்பமன்றோ!
|
சோதரன் மீண்டு வருவான்
இதில் விடுபடும் சோதரன் மீண்டு வருவான். அவன் வரும் வரை அவன் செய்த சேதங்கள் சீர் செய்வதென்பது தகப்பனாய் தோழனாய் என் கடமையன்றோ! மன்னித்து அருள்கவென அவனுக்கும் முன்னால் நின்று கேட்பதே நம்மறிவின் உச்சம். பகுத்து அறிந்த பின் பண்பிழப்பது எவ்வாறு?

எதற்கான மெசேஜ்
இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எதற்காக இந்த மெசேஜ் என்பது தெரியவில்லை. சில கமல் ரசிகர்கள் இது சமீபகாலமாக, மதநல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகள் தமிழகத்தில் நிலவுவது தொடர்பாக வெளியிடப்பட்ட ட்வீட் என்று சொல்கிறார்கள். குறிப்பாக மதம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக யூடியூப் வீடியோ வெளியானது பற்றியாக இருக்க கூடும் என்கிறார்கள். சிலரோ வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இடையேயான சர்ச்சை பற்றியது என்கிறார்கள்.

என்ன சொல்கிறார்?
அதேநேரம், இந்த ட்வீட்டை படித்து பார்த்த பலரும் புரியவில்லை என்கிறார்கள். அந்த ட்வீட்டின் பின்னூட்டத்தில் இதை பார்க்க முடிகிறது. ஆனால், முக்கியமான மெசேஜ் கமல் கொடுக்க முற்பட்டிருப்பது தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம், நம்மவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications