கலைஞர் எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் ஸ்டாலின் - ட்விட்டரில் கமல் வாழ்த்து
திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
Recommended Video

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவிற்கு சென்ற மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் இந்த முறை சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். இதனால் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.












Click it and Unblock the Notifications