கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை.. கமலுக்கு ரூ.15 கோடி இழப்பு.. 5 டைம் பார்த்து ஈடுகட்ட விமர்சகர் ஐடியா
சென்னை: கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ஏற்படும் இழப்பை, தமிழ்நாட்டில் ரசிகர்கள் 5 முறை படத்தை பார்த்து ஈடுகட்டலாம் என்று யூட்யூப் விமர்சகர் பிரசாந்த் ஐடியா கொடுத்துள்ளார். கமல்ஹாசனுக்கு ஏற்படும் இழப்பை நாம் அதிக முறை டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதன் மூலமாக சரிகட்ட முடியும் என்றும் கூறி இருக்கிறார்.
இயக்குநர் மணி ரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை வரவேற்க கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து பிறந்த மொழியே கன்னடம் என்று தெரிவித்தார்.

கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் ரிலீஸாகாது என்று அறிவித்தனர். இதனை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றத்திலும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும் என்று கெடு விதிக்கப்பட்டது.
அன்பு மன்னிப்பு கேட்காது
இதனிடையே கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதினார். அதில், கன்னட மொழி குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதன்பின் நீதிமன்றம் வழக்கை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 10 வரை கர்நாடகாவில் ரிலீஸாக வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி
கர்நாடகா வர்த்தக சபை தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ள நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்வோம் என்றும் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தக் லைஃப் படத்திற்கு ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தடை
ஆனாலும் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகாததால், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நிச்சயம் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக அம்மாநில வர்த்தக சபையே கூறி இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸாகாததால், சுமார் ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இழப்பு எவ்வளவு?
இதுதொடர்பாக யூட்யூப் சினிமா விமர்சகர் பாண்டே என்கிற பிரசாந்த் தனது எக்ஸ் பதிவில், கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதிகபட்சமாக ரூ.15 கோடி வரை இழப்பு ஏற்படும். அதனை நாம் அனைவரும் கூடுதலாக டிக்கெட்டுகளை எடுத்து படத்தை பார்த்தால், இந்த இழப்பை சமாளிக்க முடியும். இந்த படத்தை 5 முறை திரையரங்கில் பார்க்க போகிறேன்.
சினிமா விமர்சகர் பிரசாந்த் பதிவு
ஏனென்றால் இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஒவ்வொரு பணிகளையும் ராஜ் கமல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர்களே செய்துள்ளனர். எந்த பணிகளும் வெளி நிறுவனங்களிடம் அளிக்கப்படவில்லை. தயாரிப்பு தொடங்கி, விளம்பரம் வரை அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசனிடம் அதிக பணம் இருந்தால், அது அந்த இளைஞர்களுக்கு ஊதியமாக செல்லும். அதனால் I Stand with Kamalhaasan என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications