தேர்தலுக்கு ரெடியாகும் மநீம.. கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு கமல்ஹாசன் அவசர அழைப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்திற்கு அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. சட்டமன்ற தேர்தலின் சமயத்தில் திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக கமல்ஹாசன் விமர்சித்து வந்தார். தற்போது ஆளும் திமுகவுடன் அனுசரனையாக இருந்து வரும் கமல்ஹாசன் வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் கேட்டு பெறும் திட்டத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.
கமல்ஹாசன் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். இதனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 23 ஆம் தேதிக்கு இந்தக் கூட்டத்திற்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறியுள்ளார்.
இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக திமுகவுடன் நெருங்கிய நட்பில் கமல்ஹாசன் உள்ளார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications