சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா டுடே சர்வே.. கமல் பிரமாண்ட வளர்ச்சி... ஸ்டாலினுக்கு அடுத்த இடம்.. ரஜினி செல்வாக்கை இழந்தார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல் பிரமாண்ட வளர்ச்சி, ஸ்டாலினுக்கு அடுத்த இடம்- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அதிக ஆதரவு இருப்பதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    இந்திாய டுடே டிவி சேனல், 'ஆக்சிஸ் மை இந்தியா' இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் அடுத்த தமிழக முதல்வராக யாருக்கு ஆதரவு என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

    அதில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் முதல்வராக வர வேண்டும் என்பது குறித்து மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

    கமல்ஹாசனுக்கு ஆதரவு

    கமல்ஹாசனுக்கு ஆதரவு

    2018ம் ஆண்டு இதே அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், கமல்ஹாசன் முதல்வராக வர வேண்டும் என்று 8 சதவீத மக்கள் விரும்பினர். ஆனால், இம்மாதம், ஜனவரியில் எடுத்த சர்வேயில், 10 சதவீதம் பேர் கமல்ஹாசன் முதல்வராக வேண்டும் என்று விரும்பியுள்ளனர். 3 மாதங்களில் கமல்ஹாசனின் செல்வாக்கு, 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் கமல்ஹாசன் நடத்திய ஆய்வுகள், வட இந்திய நடிகர்களிடம் உதவி கோரிய பாங்கு உள்ளிட்டவை மக்கள் மத்தியில் இவரது செல்வாக்கை உயர வைத்திருக்கும் என்று தெரிகிறது. இந்த பட்டியலில் 43 சதவீத ஆதரவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார்.

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    அதேபோல பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், செல்வாக்கும் இக்காலகட்டத்தில் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. அக்டோபரில் 7 சதவீதம் பேர் தமிழக முதல்வராக அன்புமணி ராமதாஸ் வர வேண்டும் என விரும்பியுள்ளனர். ஜனவரியில் 9 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர்.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச்செயலாளர், டிடிவி தினகரனுக்கு அக்டோபரில் 6 சதவீதமாக இருந்த மக்கள் ஆதரவு, ஜனவரியில் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் சுவாரசியமான விஷயம், ரஜினிகாந்த் ஆதரவு, குறைந்துள்ளது என்பதுதான்.

    ரஜினிகாந்த்துக்கு செல்வாக்கு சரிவு

    ரஜினிகாந்த்துக்கு செல்வாக்கு சரிவு

    அக்டோபரில் 6 சதவீதம் பேர் ரஜினிகாந்த் அடுத்த முதல்வராக வர வேண்டும் என கூறிய நிலையில், இபபோது 5 சதவீதம் பேர்தான், ரஜினிக்கு ஆதரவு அளித்துள்ளனர். ரஜினிகாந்த்தைபோலவே செல்வாக்கை இழந்த மற்றொருவர் ஓ.பன்னீர்செல்வம். அக்டோபரில் 6 சதவீதம் பேர் பன்னீர் செல்வம்தான் அடுத்த முதல்வராக வேண்டும் என விரும்பினர். இப்போது 4 சதவீதம் பேர்தான் விரும்புகிறார்கள்.

    English summary
    Makkal Nedhi Mayyam chief Kamal Hasan stood at the second choice with 10 percent respondents backing him while Rajinikanth lost his people support.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X