சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த் வீட்டுக்கு படையெடுக்கும் தலைவர்கள்.. அடுத்து கமலும் வருகிறாராம்!

விஜயகாந்த்தை கமல்ஹாசனும் நேரில் சந்திக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த்தை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசிவரும் இந்த வேளையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயகாந்தை அதிமுக பாஜக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பாமகவுக்கு 7 தொகுதிகள் தரப்பட்டுள்ளதைபோல, தேமுதிகவுக்கும் 7 சீட் தர வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

5 சீட் தருவதாக அதிமுக ஒப்புக் கொண்டாலும் விஜயகாந்த் பிடிவாதமாகவே இருப்பதாக தெரிகிறது.

அரசியல் களம்

அரசியல் களம்

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த்தை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், 3-வது அணி அமையவும் வாய்ப்பு உள்ளது என்று கொளுத்தி போடவும் அரசியல் களம் இன்னும் கொதிக்க ஆரம்பித்தது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

நேற்று, திருநாவுக்கரசர் இன்று ரஜினிகாந்த், முக ஸ்டாலின் என தொடர்ச்சியாக சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளாக இவை எல்லாம் இருந்தாலும், அவை வெளிப்படையாக இதுவரை சொல்லப்படவில்லை.

3-வது அணி

3-வது அணி

எனினும் தமிழக அரசியல் பரபரப்பு நீடித்து வரும் வேளையில், கமல்ஹாசனும் விஜயகாந்த்தை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் இப்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லி வருகிறார். இருந்தாலும் 3-வது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கினால் அதில் தேமுதிக சேரும் என்றும் சொல்லப்படுகிறது.

கூட்டணிக்கு அழைப்பா?

கூட்டணிக்கு அழைப்பா?

இன்று விஜயகாந்த்தை கமல் சந்தித்து பேசுவதாக இருந்தால் கண்டிப்பாக கூட்டணிக்கு அதாவது 3-வது அணிக்கு அழைப்பு விடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
MNM Leader Kamalhasan is going to meet Vijaykanth today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X