"ஐ எம் ஏ தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன்".. விதை கமல் போட்டது.. படு வேகமாக வைரலாகும் வீடியோ...!

"தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன்" என்று கமல் சொல்லும் வீடியோ ஒன்று வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எனக்கு இந்தி தெரியாது போடா".. என்ற ட்ரெண்டிங் வரிகளுக்கு நடுவில் கமல் நடித்த ஒரு திரைப்பட காட்சியை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அதனை இப்போது வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

    தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன்.. அன்றே சொன்னார் கமல் - வீடியோ

    தனக்கு இந்தி பேச தெரியாது என்று சொன்னதால், டெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரி ஒருவர் தன்னை 45 நிமிடம் ஓரமாக நிற்க வைத்ததாக டைரக்டர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.. அதேபோல, தனக்கு இந்தி தெரியாது என்று சொன்னதால், சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என்று தன்னை பார்த்து கேட்டதாக திமுக எம்பி கனிமொழி கூறியிருந்தார்.

    Kamal Hassan dialouge on I am a Tamil speaking Indian goes viral

    இதையடுத்து இந்த விவகாரம் அரசியலானது.. பாஜக வரிந்து கட்டிக் கொண்டு வந்து, விளக்கம் சொன்னது.. இதைவைத்து திமுக அரசியல் செய்வதாக எல்.முருகன் முதல் எஸ்வி சேகர் வரை கருத்து கூறியிருந்தனர்.

    இந்நிலையில் இந்தி திணிப்புக்கு எதிராக திரையுலகமும் குரல் கொடுக்க தொடங்கியது.. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சிரிஷ் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.யுவன் டி-சர்ட்டில் "நான் ஒரு தமிழ் பேசும் இந்தியன்" என்றும், சிரிஷின் டி-சர்ட்டில் "இந்தி தெரியாது போடா" என்றும் எழுதப்பட்டிருந்தது. இதற்கு சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுதான் இப்போது டிரெண்டிங்கிலும் உள்ளது.

    இந்த சமயத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. அது கமல் பற்றின வீடியோதான்... குதர்க்கம் என்றும் சொல்லிவிட முடியாது.. துடுக்குத்தனம் என்றும் சொல்லிவிட முடியாது.. இவை இரண்டுக்கும் நடுவில் அறிவார்ந்த பதிலை பல சமயங்களில் சொல்வதுதான் கமல்ஹாசன்... இது அவரது இயல்பு என்றாலும் பல படங்களில் அந்த நிஜமே வெளிப்பட்டது!

    அப்படி, 1980-ம் ஆண்டு வெளிவந்த படம் "வறுமையின் நிறம் சிவப்பு".. இதில், கமல் வேலையில்லா பட்டதாரியாக நடித்திருப்பார். அப்போது ஒரு காட்சியில் கமல் வேலை தேடி ஒரு இன்டர்வியூ செல்வார். அங்கிருப்பவர்கள், மஹாராஷ்டிரா முதல்வர் யார்? என்ற கேள்வியை கேட்பார்கள்.

    அதற்கு கமல், "எப்போதைய முதல்வர்? இன்னைக்கா? நேற்றா? அல்லது நேற்று முன்தினமா? ஏன்னா இங்க தினம் ஒரு முதலமைச்சர் மாறிக் கொண்டே இருக்கிறார்" என்று பதிலளிப்பார். கமல் சொன்னபடி, அன்றே மகாராஷ்டிரா கலகலத்து காணப்பட்டது.. சில மாதங்களுக்கு முன்பும் கலகலத்துதான் காணப்பட்டது. அந்த இன்டர்வியூவில் "தமிழ்நாடு.. யூ ஆர் தமிழினியன்?" என்று கேட்பார்கள்.. அதற்கு கமல், "தமிழ் ஸ்பீக்கிங் இந்தியன்" என்று பதிலளிப்பார்.

    இந்த பதிலை சொல்லும்போது கமலிடம் ஒரு கெத்து தென்படும், இந்தியன் என்ற கர்வம் தென்படும்.. எல்லா வேறுபாடுகளையும் தகர்க்கும் அழுத்தம் தென்படும்.இப்படி ஒரு காட்சியை அன்றே படத்தில் புகுத்திய இயக்குனர் சிகரத்தின் துணிச்சலுக்கு ஆயிரம் முறை கைகுலுக்கலாம்.

    இதைதான் சோஷியல் மீடியாவில் பலரும் வைரலாக்கி வருகிறார்கள்.. வெறும் 6 செகண்ட்தான் இந்த வீடியோ ஓடுகிறது.. இந்தி மொழி எதிர்ப்பு குறித்த பல கருத்துக்கள் தற்போது எழுந்து வரும்நிலையில், யுவன் சங்கருக்கு முன்பே "இதுக்கு விதை, கமல் போட்டது" என்ற கமெண்ட்களுடன் இந்த வீடியோ இணையத்தில் ரவுண்டடித்து கொண்டிருக்கிறது!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+