TN local body election 2022: நீங்கள் வெளியே சென்றால்தான் வாக்களிப்பேன்.. கமல்ஹாசன் "பிடிவாதம்"
சென்னை: நீங்கள் வெளியே சென்றால்தான் வாக்களிப்பேன் என மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இன்றைய தினம் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வாக்குப் பதிவு மந்தமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திரை பிரபலங்கள், அரசு அதிகாரிகள் வாக்களித்து வருகிறார்கள்.

கமல்ஹாசன்
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க சென்றார். அப்போது அவர் வாக்களிக்கும் இடம் வரை புகைப்படக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், வீடியோ கேமராமேன்கள் அவரை படம் பிடிக்க நின்றிருந்தார்கள். இவர்களை கண்ட கமல்ஹாசன், அவர்களை வெளியேறுமாறு கூறினார்.

வெளியேறுங்கள்
பின்னர் அங்கிருந்த வாக்குப் பதிவு அதிகாரியிடம் பத்திரிகையாளர்களை வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் காலையிலிருந்து அரசியல் கட்சியினர் திரைப்பிரபலங்களை வாக்களிக்கும் இடத்திற்கே போய் புகைப்படம், வீடியோ எடுத்து வந்த நிலையில் அவர்கள் கமலையும் எடுப்பதற்காக வெளியேறாமல் இருந்தனர்.

ப்ளீஸ் வெளியே செல்லுங்கள்
பின்னர் சில நிமிடங்கள் வரை ப்ளீஸ் வெளியே செல்லுங்கள், ப்ளீஸ் வெளியே செல்லுங்கள் என கமல்ஹாசனும் வாக்கு பதிவு மைய அதிகாரியும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்கள் சார் நாங்க ஒரு ஓரமாக நிற்கிறோம் என கமலிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் கமல்ஹாசனோ அதெல்லாம் வேண்டாம், ப்ளீஸ் வெளியே செல்லுங்கள் என கைகளை கூப்பி கேட்டுக் கொண்டார்.
Recommended Video

நீலாங்கரையில் வாக்களிக்காமல் நின்ற விஜய்
இதே போல் நீலாங்கரையிலும் விஜய் வாக்களிக்கும் போது அவர் வாக்களிக்கும் இடம் வரை கேமரா பிளாஷ்கள் அடித்ததால் அவர் வாக்களிக்காமல் சில நிமிடங்கள் அப்படியே நின்றார். அப்போது விஜய்யை புகைப்படம் எடுத்துவிட்டு செல்வார்கள் என நினைத்திருந்ந்த நிலையில் அவர்கள் வெளியேறவில்லை. இதனால் அவர்களை வெளியே செல்லுமாறு சைகையில் விஜய் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications