"நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்".. ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் ட்வீட்
ரஜினிகாந்த் உடல்நிலை விரைவில் குணமடைய கமல் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை சீராக இருக்கிறது எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் அவருக்கு சிகிச்சை தரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகமும் 2வது முறையாக செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் என்றும், மகள் ஐஸ்வர்யா அவருடன் இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது... இதையடுத்து, ரஜினிகாந்த் பூரண உடல்நலமடைந்து விரைவில் குணமடைய ரசிகர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகரும், ரஜினிகாந்தின் ஆருயிர் நண்பரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்... இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், "நண்பர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் @rajinikanth (ரஜினிகாந்த்)" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், உள்ளிட்டோர் போனில் விசாரித்தனர்.. மேலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யான் உள்ளிட்டோரும் ரஜினிகாந்த் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications