அடடா... கமல் காலை யாரோ மிதிச்சுட்டாங்களாம்.. கோவை எல்லாம் இதே பேச்சு.. என்னாச்சு?
சென்னை: இன்னைக்கு காலையில் கமலின் காலை யாரோ மிதித்து விட்டார்களாம்.. அதுதான் கோவை முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Recommended Video

கமல் கோவை தெற்கு பகுதியில் களமிறங்கியதில் இருந்தே பிஸியாக உள்ளார்.. கடந்த 2 மாதமாகவே கமலின் பிரச்சாரங்கள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.. கமல் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்ததை மற்ற கட்சிகளும் கவனிக்காமல் இல்லை.
ஒருகட்டத்தில் மிரண்டு போன திமுகவே, கமலுக்கு இருக்கும் செல்வாக்கை அறிந்து கொள்ள ஒரு ரகசிய சர்வே எடுத்ததாகவும் செய்திகள் வந்தன.. அதனடிப்படையிலேயே கமலுடன் கூட்டணி வைக்கவும் பலமுறை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.. இதை திமுக தலைவரே பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.

கமலால் தாக்கம்
அந்த அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை கமலின் பிரச்சாரம் ஏற்படுத்தி வந்தது.. 2 மாசத்துக்கு முன்பே இப்படி என்றால், இப்போது கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட போகிறார்.. இந்த தொகுதிக்கு அவர் சென்றதில் இருந்தே ஒரே பிஸிதான்.. பரபரப்புதான்.. வழக்கமாக ஸ்டாலின்தான் காலையில் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செய்து கொண்டே மக்களை சந்தித்து வாக்கு கேட்பார்.

கமல் பாணி பிரசாரம்
அந்த பாணியைதான் கமலும் கையில் எடுத்தார்.. முதல் நாளிலேயே மிரள வைத்துவிட்டார்.. அவர் பாட்டுக்கு கேஷூவலாக ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டும், டீக்கடையில் டீ குடித்து கொண்டே மக்களின் குறைகளை கேட்டு கொண்டும் இருந்தார்.. பிறகு பிரச்சாரத்தை முடித்துவிட்டு, டக்கென ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து சேர்ந்ததை பாஜகவினரும் கவனிக்காமல் இல்லை. உடனே வானதி சீனிவாசனும் ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

திரும்பிப் பார்க்க வைத்த கமல்
இப்படி கமலின் பிரச்சாரங்கள் கோவையையே திசை திருப்பி வைத்து வரும் நிலையில், நாளுக்கு நாள் கமலை நேரில் சந்திக்க தொகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. அப்படித்தான் இன்றும் கமலை சந்திக்கவும், கமலிடம் ஆட்டோகிராப் வாங்கவும், செல்பி எடுக்கவும் திரண்டனர்.. அந்த கூட்டத்தில் கமல் சிக்கி கொண்டார் போலும். அவரை காலை யாரோ மிதித்து விட்டார்களாம்.. இப்பதான் அவருக்கு காலில் ஆபரேஷன் நடந்தது.. பிரச்சாரத்திற்கு லீவு லெட்டர் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்துள்ளார்..

காலை மிதித்ததால் வலி
இப்போது திரும்பவும் அதே காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. அந்த காலைதான் தொண்டர்கள் ஆர்வத்தில் மிதித்து விட்டிருப்பார்கள் போலும்.. அதனால், இன்றைய பிரச்சாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உள்ளதாகவும் மய்யம் சார்பாக சொல்லப்பட்டுள்ளது.. "பட்ட காலிலேயே படும் என்பார்களே, இதுதானோ?!"
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications