சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல்ஹாசன் காருக்கு 2022 வரை இன்சூரன்ஸ் இருக்கு - ஆதாரத்துடன் மநீம விளக்கம்

கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வரும் காரின் இன்சூரன்ஸ் முடிந்தும் அவர் அந்த காரை விதியை மீறி பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் 2022ஆம் ஆண்டு வரை கார் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வரும் காருக்கு 2022 வரை இன்சூரன்ஸ் உள்ளதாக ஆதாரத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காருக்கு இன்சூரன்ஸ் முடிந்தும் விதியை மீறி பயன்படுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில் விளக்கம் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

Recommended Video

    கமலும்… கார் இன்சூரன்சும்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மநீம!

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் குளிர்காலத்திலும் அனல் பறக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மூன்று கட்டமாக பிரச்சாரம் செய்துள்ளார்.

    Kamals car has insurance till 2022 MNMs party explained with proof

    ஆளும் கட்சியையும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியையும் தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், நான் கேட்பேன், நான் கேட்பேன் என பல்வேறு கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.

    Kamals car has insurance till 2022 MNMs party explained with proof

    காரில் பிரச்சாரம் செய்து வரும் கமல்ஹாசன் தனது காருக்கான இன்சூரன்ஸை இன்னும் கட்டவில்லை என்ற தகவல் வெளியானது. இதுதொடர்பான ஸ்கீரின் ஷாட்டை எடுத்து ட்விட்டரில் வைரலாக்கினர். நான் கேட்பேன் கமல் சார் என்று ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

    Kamals car has insurance till 2022 MNMs party explained with proof

    தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த கமலிடம், இன்சூரன்ஸ் முடிந்த காரில் ஏன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறீர்கள்..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு தற்போது கமல்ஹாசன் தரப்பில் இருந்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2022 வரை கார் இன்சூரன்ஸ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The car used by Kamal Haasan for the election campaign has been explained with proof that it has insurance till 2022. Kamal Haasan has commented on the criticism on social media that the car is being used in violation of the insurance policy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X