கமலின் திடீர் முடிவு.. கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்டாலின்.. உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு சிக்கல்!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்த முடிவு திமுகவிற்கு பெரிய பிரச்சனையாக, பின்னடைவாக மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எடுத்த முடிவு திமுகவிற்கு பெரிய பிரச்சனையாக, பின்னடைவாக மாற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.

இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக சார்பாக இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முடிவு

முடிவு

இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதன்படி எங்களுக்கு சட்டசபை தேர்தல்தான் முக்கியம் . 2021 தேர்தலில் கவனம் செலுத்துவோம். அதனால் இதில் போட்டியிட மாட்டோம் என்று கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

திமுக எப்படி

திமுக எப்படி

மக்கள் நீதி மய்யம் அரசியலில் களமிறங்கிய தொடக்க காலத்தில் இருந்தே திமுக கட்சிக்கு அது மறைமுகமாக பலன் அளித்து வந்தது. அதிமுகவின் வாக்குகளை பெரிய அளவில் மக்கள் நீதி மய்யம் பிரித்தது. அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் அதன் தொண்டர்கள் பலர் திமுகவிற்கு வாக்களிக்காமல் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களித்தனர்.

லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல்

இது லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் திமுகவிற்கு உதவியது.இதனால் தேனி தவிர திமுக தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வென்றது. மக்கள் நீதி மய்யம் சில தொகுதிகளில் இதனால் மூன்றாம் இடம் கூட பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக இதனால் படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் எப்படி

ஆனால் எப்படி

ஆனால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாத விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக மோசமாக தோல்வி அடைந்தது. மக்கள் நீதி மய்யம் வாக்குகள் எல்லாம் மீண்டும் அதிமுகவிற்கு சென்றது. இதனால் திமுக இரண்டு தொகுதியிலும் மோசமாக தோல்வி அடைந்தது.

வேலூர் நிலை

வேலூர் நிலை

அதேபோல் வேலூர் தொகுதி லோக்சபா தேர்தலிலும் திமுக திணறித்தான் வென்றது. அங்கு அதிமுக கூட்டணி வெற்றியை நெருங்கிவிட்டு கடைசியில்தான் திமுக வென்றது. அங்கு திமுக மிக மோசமாக திணற காரணம் , மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது என்றும் கூறப்பட்டது.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதனால் திமுகவிற்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி என்ற நேரடி மோதல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அமமுக இதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மிக மோசம்

மிக மோசம்

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலை தனி தனியாக நடத்துவது அதிமுகவிற்கு பலனை தரும் என்கிறார்கள். தற்போது மக்கள் நீதி மய்யமும், ஸ்டாலின் கொஞ்சமும் எதிர்பார்க்காத முடிவை எடுத்துள்ளது. ஆகவே இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+