Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் அந்த கேர்ள் ஃப்ரெண்ட்? ‘வாரிசு’ ஆடியோ விழா கதையை அவிழ்த்துவிட்ட விஷ்ணு.. ரசித்துக் கேட்ட விஜய்!

Subscribe to Oneindia Tamil

விஜய் நடிப்பில் 20 ஆண்டுகள் முன்னால் வெளியான 'கில்லி’ மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இதுவரை வெற்றி நடைபோட்டு வருகிறது..

20 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான கில்லி, திரையரங்கிற்குத் திரை ரசிகர்களைத் துள்ளிக் குதித்து அழைத்து வரச் செய்துள்ளது. பல திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Kamala theater owner Vishnu Kamal about Vijay meeting

கடந்த சனிக்கிழமை 320 திரையரங்குகளில் திரையிட்ட கில்லி முதல் நாள் மட்டும் நான்கு கோடியே 25 லட்சம் வசூல் செய்தது. மூன்று நாள்களில் மட்டும் 9 கோடியே 85 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில் இந்த வசூல் சாதனையைப் பகிர்ந்து கொள்வதற்காகக் கமலா தியேட்டர் உரிமையாளர் விஷ்ணு கமல் சில நாள்கள் முன்னதாக நடிகர் விஜய்யை 'கோட்’ படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று சந்தித்தார்.

அப்போது அவர் ஆண்டுக்கு ஒரு படம் விஜய் நடித்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் கமலா தியேட்டர் ஸ்பெஷலானது. அதை அவர் 'வாரிசு’ ஆடியோ விழாவில் பேசியிருந்தார். அப்படி உணர்வு ரீதியாகக் கலந்துள்ள தியேட்டர் உரிமையாளரான விஷ்ணுவிடம் விஜய் என்ன பேசினார்? அன்று நடந்தது என்ன ? என்று அவர் விரிவாகப் பேசி உள்ளார்.

Kamala theater owner Vishnu Kamal about Vijay meeting

அந்தச் சந்திப்பு பற்றி விஷ்ணு கமல், , “விஜய் அண்ணாவைப் பார்க்க வேண்டும் என்பது பல கோடி ரசிகர்களின் ஆசை. அந்த ஆசை எனக்கு நிறைவேறி இருக்கிறது. இந்தச் சந்திப்பு ஒரு மேஜிக்கல் மொமண்ட் என்றுதான் சொல்வேன்.

'கில்லி’ படம் திரையிட்டது முதல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்துவருகிறது. அதைக் கொண்டாடும் விதமாகத்தான் விஜய் அண்ணாவைப் பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டேன்.

Kamala theater owner Vishnu Kamal about Vijay meeting

அவர் அப்பா கேட்டால், உடனே வரச் சொல்லி அனுமதி கொடுப்பார். எனக்குத் தருவாரா என ஒரு தயக்கத்தோடுதான் கேட்டேன்.

விஜய் அண்ணா உடனே என்னைச் சின்ன பையன் எனப் பார்க்காமல், உடனே அழைத்தார். நான் அவரைப் பார்க்கப் போன உடன், 'முதல்ல உட்காருங்க. கொஞ்ச நேரம் பேசுவோம்’ என்று பேசினார். அந்தப் பேச்சு 15 நிமிடங்கள் நடந்தது.

விஜய் அண்ணாவும் அப்பாவும் கல்லூரி நண்பர்கள். எங்கள் அப்பாவின் கல்யாணத்தின் போது 'செல்லா’ க்ளைமேக்ஸ் காட்சி ஷுட்டிங்கில் விஜய் அண்ணா இருந்தார். அதை முடித்துவிட்டு, கல்யாணத்திற்கு வந்து ரொம்ப நேரம் இருந்தார் விஜய் அண்ணா.

அந்த விசயத்தை மீண்டும் இப்போது விஜய் அண்ணாவுக்கு நினைவுபடுத்தினேன். அதற்கு அவர், 'நல்லா ஞாபகம் இருக்கு. அப்பா, அம்மாவை நான் விசாரித்தேன் என்று சொல்லுங்கள்’ என்றார்.

நான் அவரைப் பார்த்துப் பேசிவிட்டு, வெளியே வரும் 'அண்ணா செம அழகா இருக்கீங்கண்ணா.. செம அழகா இருக்கீங்கண்ணா’ என இந்த ஒரே வார்த்தையை வெளியே வரும்வரை அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

அவர் ஓட்டுப் போட வரும்போது அவர் கையில் ஏதோ பேண்டேஜ் போட்டிருந்தார். அவருக்கு ஏதோ அடிப்பட்டுள்ளது என்பது மட்டும் தெரிந்தது. ஆகவே, அவரைப் பார்த்தபோது 'கையில் அடிப்பட்டு இருந்ததே இப்போது சரியாகிடுச்சா?’ எனக் கேட்டேன். அவர், 'ஒன்று பிரச்சினை இல்லை. நன்றாக ஆகிவிட்டது’ என்றார்.

எங்க தியேட்டரில் 'கில்லி’ எந்தளவுக்குச் சிறப்பாகப் போகிறது என்பதை சொன்னே. இப்போது வரை 52 ஆயிரம் டிக்கெட் விற்பனையாகி உள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் 'லியோ’ வசூலைத் தாண்டிவிடும் 'கில்லி’. எனக்கு அது நன்றாகத் தெரியும்.

புதிய படம் 'லியோ'. அது வெளியான போது மிகப்பெரிய ரெக்கார்ட் செய்து இருந்தது. 'கில்லி' ரீ ரிலீஸ்தான். அது 'லியோ'வை தூக்கிச் சாப்பிட்டு உள்ளது. ஹாலிவுட் படங்களான 'டைட்டானிக்', 'அவதார்' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆன போது ரெக்கார்ட் பிரேக் செய்தன. அதே சாதனையை 'கில்லி' செய்துள்ளது.

நான் அவரைப் பார்க்கப் போகும் முன்பு நிறைய முன் தயாரிப்புகளுடன் இருந்தேன். அவர் 'உள்ள வாங்க’ என்று சொன்னதும் நான் பேச நினைத்தது எல்லாமே மறந்து போய்விட்டது.

ஒரு ரசிகராக விஜய் அண்ணாவுக்கு நான் மூன்றாவது தலைமுறை. அவருக்குத் தாத்தாவையும் தெரியும், அப்பாவையும் தெரியும்.

'பூவே உனக்காக’ படத்திற்காக ஒரு விழாவை எங்கள் தியேட்டரில் வைத்திருந்தோம். அதற்குச் சிறப்பு முன்னாள் முதல்வர் கலைஞர்தான் வந்திருந்தார். அந்த விழாவில் நடந்த விசயங்களை விஜய் அண்ணா எனக்குச் சொன்னார்.

அண்ணா நீங்க 'வாரிசு’ ஆடியோ விழாவில் கமலா தியேட்டரில் போய் அடித்துப் பிடித்து படம் பார்த்ததைப் பற்றிப் பேசி இருந்தீர்கள். நாங்கள் 'கில்லி’ ஒவ்வொரு ஷோவுக்கு முன்னாடியும் அந்தப் பேச்சைப் போட்ட பிறகுதான் படத்தையே போட்டுக்காட்டுகிறோம் என்று சொன்னேன்.

ஆனால், அந்த கேர்ள் ஃபிரெண்ட் யார் என்று நான் கேட்கவில்லை. கடைசியாக வெளியே வரும்போது, 'வருடத்திற்கு ஒரு படமாவது நீங்கள் நடித்துத் தரவேண்டும். அது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை' என்று சொன்னேன்.

இந்த 2024 ஆம் ஆண்டு முன்பதிவு சாதனை படைத்த படம் எது என்று கேட்டால், அது 'கில்லி’தான். இந்தப் படத்தை திரையிட்ட நாள் முதல் ஹவுஸ்ஃபுல்லாக போய்க் கொண்டுள்ளது. கட்டாயம் இது மிகப்பெரிய வெற்றிதான்” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+