பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்!
சென்னை: ஏப்ரல் 17ல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 20 வரை 26 தொகுதிகளில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். தவெக தலைவர் விஜய் களமிறங்கும் 2 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, மனுக்களை திரும்பப்பெறும் அவகாசம் உள்ளிட்டவை நிறைவடைந்தன. இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

தேர்தல் பிரச்சாரம்
இந்த நிலையில் அனைத்து கட்சிகளினரும் தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வருகின்றனர். திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சுற்றிச் சுழன்று வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வருகிற 17ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கமல் பரப்புரை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவருக்கு எதிராக திமுக கூட்டணியை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான எம்பி கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
ஏப்ரல் 17ஆம் தேதி விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார் கமல்ஹாசன். அதைத்தொடர்ந்து அன்றைய தினம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார் கமல்ஹாசன்.
கமல் பிரச்சார அட்டவணை
17 ஆம் தேதி
சென்னை கிழக்கு - துறைமுகம்
சென்னை வடக்கு - பெரம்பூர்
சென்னை கிழக்கு - கொளத்தூர், வில்லிவாக்கம்
18 ஆம் தேதி
சென்னை தென்மேற்கு - தியாகராயர் நகர், மயிலாப்பூர்,
சென்னை மேற்கு - சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி
சென்னை தெற்கு - வேளச்சேரி
19 ஆம் தேதி
திருப்பூர் வடக்கு - அவினாசி
கோவை மாநகர் - கோவை தெற்கு
20 ஆம் தேதி
திருச்சி தெற்கு - திருச்சி கிழக்கு
திருச்சி மத்திய - திருவரங்கம், லால்குடி
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications