கமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்!

கமல்ஹாசன் போட்ட அடுத்தடுத்த 3 வீடியோக்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன் | Kamalhasan post Videos against BJP

    சென்னை: கமல் ஒரு வீடியோ வெளியிட்டாலே பாஜகவுக்கு அள்ளு கிளம்பி விடுகிறது.. சில தினங்களாகவே அடுத்தடுத்து 3 வீடியோக்களை போட்டு தெறிக்க விட்டுள்ளார் கமல்! என்ன காரணம்?

    தமிழகம் தற்போது அமைதி பாதையில் நகரவில்லை.. ஏகப்பட்ட பிரச்சனைகள், அவலங்கள், கொடூரங்கள், அத்துமீறல்கள், நிகழ ஆரம்பித்துவிட்டன. இதில் மாநில உரிமை நசுக்கப்படுவது முதல், உயிரிழப்புகள் வரை தமிழகம் சிக்கி திணறி வருகிறது.

    அப்படிதான், சுபஸ்ரீ மரணம், அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி விவகாரமும் ஏற்பட்டது. இது இரண்டுமே தனிநபர் பிரச்சனை என்று சொல்லி நாம் அவ்வளவு சுலபமாக ஒதுங்கிவிட முடியாது. பொதுபிரச்சனை மட்டுமல்லாமல், உரிமைகளை நசுக்கிவிடும் பிரச்சனையாகவும் இவை பார்க்கப்படுகிறது.

    வீடியோ

    வீடியோ

    அதனால்தான், சுபஸ்ரீ மரணத்துக்கும் சரி, இந்தி திணிப்புக்கும் சரி அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவிட்டன! இப்படி கமலும் ஒரு அறிக்கை மூலமாகவோ, அல்லது, ட்விட்டர் பதிவு மூலமாகவோ ஒரு கண்டனத்தை சொல்லி விட்டு போயிருக்கலாம். ஆனால், இவர் மட்டும் ஏன் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்?

    கமல்

    கமல்

    காரணம்.. இதுதான்.. சாதாரண பிரச்சனையாக இருந்தால்கூட பரவாயில்லை, இது இந்தி மொழி சமாச்சாரம். ஏற்கனவே எவ்வளவுதான் பாஜகவை எதிர்த்து பேசினாலும், அக்கட்சியின் பிம்பம் என்றே கமல் இன்னமும் பார்க்கப்பட்டு வருகிறார். இந்த விஷயத்தில் சாதாரணமான எதிர்ப்பைவிட வீடியோ மூலம் கண்டனத்தை வெளியிட்டு கருத்து சொன்னதற்கு காரணமே, பாஜகவின் நிழல் என்ற பிம்பத்தை உடைக்கத்தான்.

    அமித்ஷா

    அமித்ஷா

    அது மட்டுமில்லை.. "ஷா" என்று பெயர் சொல்லி வீடியோ வெளியிடும் அளவுக்கு துணிச்சல் உள்ளவர்கள் இங்கு வெகு வெகு குறைவே! திமுக, விசிக, மதிமுக.. என்று இவர்கள் தரப்பில் கண்டனங்களை வெளியிட்டாலும், அது எதிர்பார்க்கப்பட்ட ஒரு எதிர்ப்புதான். இவர்கள் போராட்டமே செய்தாலும் அந்தந்த கட்சி சார்பாக நடத்தப்படும் போராட்டமாகத்தான் அவைகள் பார்க்கப்படும்.

    நடுநிலை

    நடுநிலை

    ஆனால் இந்த கட்சிகளை சாராத.. அதாவது நடுநிலை தரப்பு என்று உள்ளது. அவர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள்.. குறிப்பாக இளைஞர்கள்..மாணவர்கள்.. இவர்களிடையேதான் கமல், சீமான் போன்றவர்கள் தங்கள் எழுச்சி மிகு பேச்சினால்.. பிரசித்தி பெற்று வருகிறார்கள். அவர்களின் நாடி நரம்புகள் புடைக்க கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இவர்களுக்கான விழிப்புணர்வாகவே இந்த கமலின் வீடியோ சுண்டி இழுக்கப்படுகிறது.

     நிர்ப்பந்தம்

    நிர்ப்பந்தம்

    இப்படி வீடியோ வெளியிட்டு அதிமுக, பாஜகவை சுட்டிக்காட்டாவிட்டால், கமலை ஏற்கனவே கார்னர் செய்ய காத்திருக்கும் சில கட்சிகளுக்கு மெல்ல அவல் கிடைத்தது போலவும் ஆகிவிடும். இப்போது துணிந்து வீடியோ வெளியிட்டுள்ளதால் எந்த கட்சியாலும் இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏன்.. பாஜகவாலேயே கமலை கேள்வி கேட்க முடியாத நிலைதான்.

    சு.சாமி

    சு.சாமி

    அதனால்தான் அமித்ஷா பேச்சுக்கு ஸ்டாலின் முதல்நாளே கண்டனம் தெரிவித்து இருந்தாலும், 2 நாள் கழித்து கமல் போட்ட வீடியோவுக்குதான் சுப்பிரமணிய சாமி டென்ஷன் ஆகிவிட்டார். எல்லார் மேலயும் கேஸ் போடும் சு.சாமிக்கு கமல் மீது கேஸ் போட முடியவில்லை. காரணம், கமல் மீது ஊழல் கறை இல்லை. எந்த சொத்தையும் வாங்கி குவிக்கவில்லை.. யார் சொத்தையும் ஆட்டைய போடவில்லை. சுட்டிக்காட்டி சொல்லக்கூடிய அளவுக்கு குறைகளை கமல் வைத்திருக்கவில்லை.

    தாக்கம்

    தாக்கம்

    அப்படியே கமல் மீது கேஸ் போட காரணத்தை இனிமேல்தான் பாஜக தேடி கண்டுபிடித்து போடும் என்றாலும், யாருக்கும் பயப்படாமல், வருங்கால தலைமுறையின் நலனை கருத்தில் கொண்டு... அடுத்தடுத்து கமல் போட்டுள்ள இந்த 3 வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதுதான் உண்மை!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+