சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ரீபிரியாவிடம் நெருங்கி வந்த நபர்.. "கொடுங்க.. தருவீங்களா மாட்டீங்களா".. மிரண்டு போன மயிலாப்பூர்

ஸ்ரீபிரியா மயிலாப்பூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீபிரியா வாக்கு சேகரித்து வந்து கொண்டிருந்தபோது, டக்கென குறுக்கே வந்து நின்றார் அந்த நபர்.. இறுதியில் அவரை சமாளிப்பதற்குள் அங்கிருந்தோருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறார்.. இந்த தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீபிரியா களம் கண்டுள்ளார்.

அந்த தொகுதியில் எல்லா பகுதிகளிலும் சென்று டார்ச் லைட் சின்னத்துக்கான வாக்குகளை சேகரித்தும் வருகிறார்.

குடிகாரர்

குடிகாரர்

அந்த வகையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியிலும் வாக்கு சேகரித்தார்.. திறந்த ஆட்டோவில் நின்று கொண்டு வாக்கு கேட்டு வந்தார். அப்போது, குடிமகன் ஒருவர் அங்கே வந்தார்.. ஸ்ரீபிரியாவை பார்த்ததும் கையை குலுக்க கை நீட்டினார்.. ஆனால், ஸ்ரீபிரியாவோ, கொரோனா காரணம் காட்டி வேண்டாம் என்று சமாளித்தார்.

டென்ஷன்

டென்ஷன்

உடனே அந்த குடிகாருக்கு கோபம் வந்துவிட்டது. "கையை கூட தர மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்பறம் எப்படி ஓட்டு போடறது?" என்று டென்ஷன் ஆனார்.. உடனே ஸ்ரீபிரியாவே, "அப்படி இல்லை, என்னால உங்களுக்கு கொரோனா வந்துட்டா எப்படி?" என்று கேட்டார். இதை கேட்டதும் குடிகாரர் பதறி விட்டார்.. "என்னது உங்களுக்கு கொரோனா இருக்கா? என்றார்.. உடனே ஸ்ரீபிரியா "ஆமாம்" என்று பொய் சொல்லி சமாளித்தார்.

போலீஸ்

போலீஸ்

அப்போதும் அந்த குடிகாரர் விடவில்லை.. சரி, பாவாயில்லை.. கை குடுங்க என்று நடுநடுவே வந்து கையை நீட்டினார்.. பிறகு ஸ்ரீபிரியா, "இங்க பாருங்க, உங்க நல்லதுக்குதான் சொல்றேன்.. நான் இப்போ உங்களுக்கு கை கொடுத்தேன்னு வெச்சுக்குங்க.. நம்ம ரெண்டு பேரையும் புடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க" என்றார். அதற்கு பிறகு அந்த குடிகாரர், "என்னது ஜெயிலா.. ஸாரி மேடம்" என்று சொல்லி அப்போதுதான் விலகி சென்றார்..

பரபரப்பு

பரபரப்பு

இப்படித்தான் கடந்த வாரம் ஸ்ரீபிரியாவிடம், இதேபோன்ற குடிகாரர் ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்தார்.. ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த அந்த நோயாளி குடிகாரர், சொந்த ஊர் சென்று கொண்டிருந்தபோது, வழியில்ஸ்ரீபிரியாவை பார்த்ததும் டக்கெனநின்றுவிட்டார்.. பணம் கேட்டு தொந்தரவு செய்து, கடைசியில் பாதுகாப்பு போலீசார் தலையிட்டு, அந்த நபரை அங்கிருந்து அனுப்பி வைத்த சம்பவம் நடந்தது.. இப்போது, அதுபோலவே, இன்னொரு சம்பவம் நடந்துள்ளது வியப்பை தந்துள்ளது.

English summary
Kamalhasans MNM Mylapore Candidate Sripriya campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X