திடீர் பரபரப்பு.. ராத்திரியோடு ராத்திரியாக... பிக்பாஸ் நிகழ்ச்சியால் வெடித்த இன்னொரு சர்ச்சை
பிக்பாஸ் வீட்டில் கமல் சின்னத்துடன் நிகழ்ச்சி நடத்தினார்
சென்னை: நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கட்சி சின்னத்துடன் வந்துவிட்டதாக ஒரு பரபரப்பு கிளம்பி உள்ளது.
பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையை, தன்னுடைய அரசியல் மேடையாகவே பயன்படுத்திவருகிறார் கமல்ஹாசன் என்று ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது.
இது முதல் சீசனில் இருந்தே முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றாலும் கமல் இதை கண்டுகொள்வதே கிடையாது. இப்போதுவரை அதிமுக, திமுக என எல்லாரையுமே போட்டு தாக்கி வருகிறார்.

நக்கல்
இதைதவிர, சமூகத்தில் நடக்கும் பிரச்னைகள், குறைகள், அவலங்களையும் பிக்பாஸ் மேடையிலேயே அப்பட்டமாக சொல்லி, உலகமெல்லாம் கொண்டு போய் சேர்க்கிறார் கமல்.. ஆனால் அதை சீரியஸாக சொல்லாமல், நக்கலாகவும், குத்தலாகவும், காமெடியாகவும் இடித்துரைத்து வருகிறார்.

பெரிய மாற்றம்
ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு பெரிய மாற்றம் தென்பட்டது.. வழக்கமாக வாராவாரம் கமல் அணியும் டிரஸ்ஸுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.. அந்த எந்த டிரெஸ் அணிவார் என்று உற்றுநோக்கப்படும்.. நேற்றம் அப்படித்தான் கவனிக்கப்பட்டது.

கொடியின் சின்னம்
அந்தவகையில் ஒரு கருப்பு ஊதா நிறத்தில் கோட் சூட் ஒன்றை அணிந்திருந்தார்... அந்த சூட்டின் ஹாண்ட் ஸ்லீவில் தனது மக்கள் நீதி மய்ய கட்சியின் கொடியின் சின்னம் காணப்பட்டது.. எதற்காக இப்படி சின்னத்துடன் வந்தார் என்று தெரியவில்லை.. கையை ஆட்டி ஆட்டி பேசி கொண்டிருந்தார். உடனே கமல் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் இந்த டிரஸ்ஸை படம், வீடியோக்களை பதிவிட்டு அதகளப்படுத்திவிட்டனர்.

வாக்காகுமா?
#எங்கள்ஓட்டுகமலுக்கு என்ற ஹேஷ்டேக்கை ராத்திரியோடு ராத்திரியாக ட்ரெண்ட் ஆக்கியும் விட்டனர்.. ஏன் கமல் இப்படி செய்தார்? ஓபனாகவே சின்னத்துடன் வந்துவிட்டாரே? யாரும் இதை கேள்வி எழுப்பவில்லையா?அல்லது எதேச்சையாக நடந்தது என்று கடந்து போய்விடுவதா? என்று தெரியவில்லை.. ஆனால், 3 மணி நேரம் சின்னத்துடன் ஒரு கட்சி தலைவர் டிவியில் ஷோ செய்தது போலதான் இது தென்பட்டது.. எனினும், இவ்வளவும் வாக்காக மாறுமா?என்பதுதான் லட்சம் சந்தேகம்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications