சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. 'சுற்றுச்சூழலை பாதுகாப்பேன்'.. கமல்ஹாசன் அளித்துள்ள 7 வாக்குறுதிகள்..!
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 7 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்று உற்பத்திகளை ஊக்குவித்தல், நிலத்தடி நீர் கட்டுப்பாடு உள்ளிட்ட 7 தலைப்புகளில் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு;

பிளாஸ்டிக்கிற்கு பதில்
1.சுழற்சி பொருளாதாரத்தை நிறுவுதல்:
மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு விதிகளை வகுப்பதன் மூலம் நீர், நெகிழி மற்றும் மின் கழிவு போன்ற பொருட்களுக்கு ஒரு சுழற்சி பொருளாதாரத்தை நிறுவுதல். குடிசைத் தொழில்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களால் நெகிழி இல்லாத மாற்று உற்பத்திகளை ஊக்குவித்தல்.

செயல்பாடு
2.மாசுபாட்டின் தரங்களை கண்காணித்தல் மற்றும் செயல்படுத்துதல்:
2017-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாசு கண்காணிப்புத் தரவுகளும் தொடர்ச்சியாக "OCEMS-(ஆன்லைன் தொடர்ச்சியான உமிழ்வு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள்) மூலமாக தொடர் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.

கட்டுப்பாடு
3.கடுமையான நிலத்தடி நீர் கட்டுப்பாடு:
விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் நலனுக்காக விரிவான மற்றும் கடுமையான நிலத்தடி நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பெரிய அளவிலான நிலத்தடி நீர் உற்பத்திக்கு வழிவகுக்கப்படும். ஏரிகள், கண்மாய்கள், நீர் நிலைகள், நீர்வழிகள் மற்றும் சதுப்புநில பாதுகாப்பை உறுதி செய்ய விதிகள் திருத்தி அமைக்கப்படும்.

நிலையான வளர்ச்சி
4.மாநிலம் தழுவிய சுற்றுச்சூழல் நிலப்படம் உருவாக்கப்படும்:
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தொழில்துறை தளங்களுக்கென தனி அளவுகோல்கள் வடிவமைக்கப்படும்.
5.நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் முன்னேற்றம்:
சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மற்றும் பசுமைத் தொழில்களை செயல்படுத்த வெகுவாக ஊக்குவிப்போம்.
உள்ளூர் மக்கள்
உயிர்ச்சூழல் அமைப்பு
6.உள்ளூர் மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல்:
உள்ளூர் மக்கள் அடங்கிய சுற்றுச்சூழல் குழுக்கள் துவங்கப்பட்டு, TNPCB மற்றும் மாவட்டம் நிர்வாக உதவியுடன், பெருமளவு மாசுபடுத்தும் இடங்கள் கண்டறியப்பட்டு தொழில்துறை மாசுக்கள் கட்டுப்படுத்தப்படும்.
7.உயிர்ச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பு:
தொழிச்சாலைகள் மற்றும் பொதுமக்கள் இடையே உயிர்ச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டு சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்படும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications