அன்பு சகோதரர் ஸ்டாலின்... கமல் பிறந்தநாள் வாழ்த்து... ரஜினி...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் ஸ்டாலின் என்றும், அநீதிகளுக்கு எதிராக ஸ்டாலின் குரல் நிறைய நாட்கள் ஒலித்திட வேண்டும் எனவும் கமல் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கமல் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தாரா என்பது பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை.

கமல் வாழ்த்து

கமல் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதையொட்டி அவருக்கு திமுக முன்னணி நிர்வாகிகளும், தொழிலதிபர்கள் பலரும் அலைபேசி மூலம் காலை முதல் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த ஆண்டு பிறந்தநாளன்று ஸ்டாலின் யாரையும் சந்திக்காததால் எல்லோரும் அலைபேசி மூலமாகவே வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிற்பகலுக்கு மேல் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அநீதிக்கு எதிராக

கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், '' அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், தமிழகத்தில் நடக்கு அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் தொடர்ந்து ஒலித்திட வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கமல் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் கமல் வாழ்த்துக் கூறியிருப்பதன் மூலம் அவர் அலைபேசி மூலம் ஸ்டாலினிடம் பேசவில்லை என்பது தெரியவந்துள்ளது.

விவரம் இல்லை

விவரம் இல்லை

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறினாரா என்ற விவரத்தை அறிய அனைத்து தரப்பும் ஆவல் காட்டுகிறது. ரஜினியிடம் இருந்து வாழ்த்து வந்திருந்தால் அதை திமுக வெளியிட்டிருக்கும் என்றும், இன்னும் அவர் வாழ்த்துச்சொல்லவில்லை போல் அதனால் தான் அது பற்றிய எந்த தகவலும் இல்லை எனவும் அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறிய விஐபிக்கள் பற்றிய பட்டியலை இந்தாண்டு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கூட வெளியிடாதது கவனிக்கத்தக்கது.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

இதனிடையே கடந்த டிசம்பர் 12-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது. அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் நீண்ட ஆண்டுகள் வாழ வேண்டும் என ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஸ்டாலின் தனது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், ரஜினி வாழ்த்து தெரிவித்தாரா என்பது தான் அனைவரது கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+