பார்ரா.. ஸ்டாலினுக்கு பறந்து வந்த நன்றி.. அப்படின்னா "அவர்" திமுகவில் இணைய போகிறாரா?
கமீலா நாசர் விரைவில் திமுகவில் இணைவார் என்கிறார்கள்
சென்னை: இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.. அதில் முக்கியமாக கமீலா நாசரின் பாராட்டு பார்க்கப்படுகிறது.
பதவியேற்றதில் இருந்தே, தொற்றை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது.. அதிரடியாக லாக்டவுனை போட்டதுடன், மக்களின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை தேவைகளையும் ரேஷன் பொருட்கள் மூலமாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. இப்போது மெல்ல மெல்ல தொற்று குறைந்து வருகிறது.
பதவியேற்ற போது, தொற்று பரவல் பிரச்சனை, திமுக அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது.. எதிர்க்கட்சிகளின் எந்தவித விமர்சனத்துக்கும் ஆளாகாமல், ஸ்டாலின் அரசு சிறப்புடன் ஆட்சி நடத்தி வருகிறது. இதுதான் மாற்று கட்சி சேர்ந்தவர்களையும் கவர்ந்திழுத்து வருகிறது.
|
திமுக
அந்த வகையில், பல கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.. அப்படித்தான் மநீமய்யத்தில் இருந்து விலகிய கமீலா நாசரும் ஆர்வம் காட்டி வருகிறார்.. இதுவரை இல்லாமல் முதல்முறையாக திமுக அரசை பாராட்டி உள்ளார்..

முகாம்
தமிழக முதல்வர் ஸ்டாலின், முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு 5.42 கோடி ரூபாய் ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின், 5 பயனாளிகளுக்கு உதவி வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதற்குதான் கமீலா நாசர் நன்றி சொல்லி உள்ளார். கமீலாவின் இந்த பாராட்டையும், நன்றியையும் சாதாரணமாக பார்க்க முடியவில்லை.

கமீலா
காரணம் கமீலா நாசர் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி விட்டார். அவர் திமுகவில் சேரப் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் நன்றாக இருப்பதால், கமீலா நாசர் விரைவில் திமுக பக்கம் வர உள்ளதாக நேற்றுகூட நாம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்... மநீமய்யத்தில் இருந்து இவர் ஏன் விலகினார் என்ற காரணம் இதுவரை வெளிப்படையாக தெரியாவிட்டாலும், ஸ்டாலினை ஏன் பாராட்டுகிறார் என்ற காரணம் நன்கு விளங்குகிறது.

மகேந்திரன்?
இதற்கு முன்பு, மய்யத்தில் இருந்து மகேந்திரன் விலகிய நிலையில், இவர்தான் திமுகவில் இணைய போகிறார் என்று சலசலக்கப்பட்டது.. ஆனால், இப்போது கமீலா நாசர், மகேந்திரனை முந்திக் கொண்டு விடுவார் போல தெரிகிறது.. கமீலா திமுக பக்கம் வந்துவிட்டால், அவரை தொடந்து மேலும் பலர் திமுகவில் இணையக்கூடும் என்றும் கருதப்படுகிறது..












Click it and Unblock the Notifications