யோவ்.. என்னய்யா பண்ணுவ, போய்யா.. கழட்டிருவியா நீ.. போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ
போலீஸ் அதிகாரியை காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: "யோவ் என்னய்யா பண்ணுவே நீ.. மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை.. அப்படித்தான் பேசுவேன் நான்.. என்னய்யா கழட்டுவே நீ?" என்று போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ எழிலரசனின் வீடியோதான் இப்போது சுட சுட வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரசாரம் செய்ய வந்தபோது, அங்கு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். அதே நேரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள வருவதாக இருந்தது.
இதன்காரணமாக தேரடி பகுதியில் திமுகவினரும் திரண்டு விட்டனர். ஒரு பக்கம் திமுக, மறுபக்கம் அதிமுக என தொண்டர்கள் திரண்டுவிட்டதால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

எம்எல்ஏ எழிலரசன்
அது மட்டுமல்லாமல், திமுகவினருக்கு தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கிய இடத்திலும் அதிமுகவினர் குவிந்து விட்டனர். இதனால் அந்த இடமே பதட்டமாகிவிட்டது. அப்போதுதான் அங்கு காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வந்தார்.

வாக்குவாதம்
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில் ஒருவர் போலீஸ் அதிகாரி போல தெரிகிறது. அவரிடம் ஒருமையில் பேசி சண்டைக்கு போய்விட்டார் எழிலரசன்.

திமுக ஆதரவாளர்கள்
"யோவ் என்னய்யா பண்ணுவே நீ.. மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை.. அப்படித்தான் பேசுவேன் நான்.. என்னய்யா கழட்டுவே நீ?" என்று ஆவேசமாக பேசினார். ஆனால் அந்த அதிகாரி நிலைமையை கட்டுப்படுத்தவே முயற்சி செய்தார். பதிலுக்கு எம்எல்ஏவிடம் ஆவேசமாக நடந்து கொள்ளவில்லை. மாறாக எழிலரசனுடன் வந்த திமுக ஆதரவாளர்கள் கொதித்து போய் பேசினர்.

சாலை மறியல்
பிறகு நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டார். இதனால், விஷ்ணுகாஞ்சிபுரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் திமுக எம்எல்ஏ எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே திமுக என்றாலே ரவுடி கட்சி என்று பெயர் கிடைத்துள்ளது.

ஆவேச கத்தல்
இது போதாதென்று, பியூட்டி பார்லர், பிரியாணி கடை விவகாரம் என்று அதிமுக தரப்பில் கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில், அதுவும் தேர்தல் நடக்கிற சமயத்தில் எழிலரசின் ஆவேச கத்தல் வீடியோ மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications