Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின் சேவையில் விஞ்சி நிற்கும் காஞ்சி - ஒன்றரை ஆண்டில் தன்னிறைவு பெற்றது எப்படி?

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: கோயில்களின் நகரம் என்றால் அது காஞ்சிபுரம்தான். திரும்பிய திசை எல்லாம் கொட்டிக்கிடக்கின்றன கோயில்கள். அதேபோல் அதிகமான நெசவாளர்கள் வாழும் நகரம்.

இதற்கு இணையாக வேளாண் நிலங்கள், தொழிற்சாலைகள், கல்லூரிகள் என பலவும் உள்ளன. ஆகவே அதிக மின் தேவை மிக்க நகரமாகக் காஞ்சிபுரம் இருந்துவருகிறது.

இந்த அளவு சிறப்புகள் அதிகமாக இருப்பதைப் போலவே, இந்த நகரத்திற்கு மின் தேவையும் அதிகமாக இருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகரம் தனது மின் தேவையில் தன்னிறைவு பெறவில்லை.

கடந்த ஆட்சியிலும் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகுத்தவர் திமுகவைச் சேர்ந்த சி. வி. எம். பி. எழிலரசன்தான். இந்த முறையும் இவர்தான் இத்தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினர்.

20 ஆண்டுகளாகக் காத்திருந்த விவசாயி:

20 ஆண்டுகளாகக் காத்திருந்த விவசாயி:

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இத்தொகுதி எதிர்க்கட்சியின் வசமாக இருந்ததால் கண்டுகொள்ளப்படவில்லை எனப் புகார் சொல்கிறார்கள் இந்த நகர மக்கள். திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் மின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது காஞ்சிபுரம்.

இந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார் ஏ.வெங்கடேசன். கடந்த 30 ஆண்டுக்காலமாக மின் இணைப்பு கேட்டுக் காத்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த ஆட்சியில்தான் இவருக்கு இலவச மின் இணைப்புக் கிடைத்துள்ளது. ஆகவே பெரிய மகிழ்ச்சியில் உள்ளார் இவர்.

முன்பு பக்கத்து மேட்டாரில் இருந்து மின்சாரம் எடுத்து தனது நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார். அப்போது 20 ஆயிரம் வரை செலவு செய்தால் அதில் லாபமாக 4 ஆயிரம் கூட கிடைக்காது என்கிறார். தண்ணீர் பாய்ச்சவே அதிக செலவாகிவிடும். பயிர் லாபம் தராது. ஆனால் இந்த இலவச மின்சாரத்தால் இப்போது லாபம் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.

கடந்த 25 வருடங்களாகக் காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவருபவர் ஜோதி அவர், "முன்பு எங்கள் பகுதிக்கு மூன்று தெரு தள்ளியுள்ள மின்நிலையத்திலிருந்துதான் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் எங்கள் தெருவே மிகச் சிறியதாக இருந்தது. அதனால் நான்கு கம்பங்களை நட்டு மின்மாற்றிகளை நிறுவ முடியவில்லை. அப்படி வைத்தால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதால், மின்மாற்றிகளை நடுவதில் சிக்கல்கள் இருந்தன.

ஆனால், இந்த ஆட்சியில் புதிய பாணியில் ஒரு கம்பத்தை நட்டு, அதில் சிறிய அளவிலான மின்மாற்றிகளை வைத்துள்ளனர். இதனால் எங்கள் பகுதிக்குச் சரியாக மின்சாரம் கிடைத்து வருகிறது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, எங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கும் மின்துறைக்கும் நன்றி" என்கிறார்

காஞ்சிபுரம் அடைந்துள்ள மாற்றங்கள்:

காஞ்சிபுரம் அடைந்துள்ள மாற்றங்கள்:

இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து வடக்கு காஞ்சிபுர செயற்பொறியாளர் கை. ஸ்ரீதர், "காஞ்சிபுரத்தை பொறுத்தளவில் மொத்தம் நான்கு 110 கேவி துணைமின் நிலையங்களும் ஆறு 33 கேவி துணை மின்நிலையங்களும் உள்ளன. காஞ்சிபுரத்தை பொறுத்தளவில் சிறு மற்றும் குறு தொழில்கள் அதிகம்.

அதாவது அரிசி ஆலைகள், கைத்தறி பட்டு நெசவாலைகள் இப்படி நிறைய மின் தேவைகள் உள்ளன. அதை மனதில் கொண்டு சில்க் பார்க்கில் புதியதாக மின்நிலையம் கட்ட திட்டம் வகுத்துள்ளோம்.

இது அமைந்தால் சில்க் பார்க் சொசைட்டிக்கு மட்டும் இல்லாமல், குடிசை மாற்று வாரியம் சார்பாக 2500 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளிலும் குடியேறிவிட்டார்கள். இரண்டிற்கும் சேர்த்து தடையற்ற மின்சாரத்தை வழங்க இது உதவும்" என்கிறார்

ஸ்ரீநிவாசன், "வையாவூர் பகுதிகளில் மட்டும் தனி போஸ்ட் மூலம் நிறுவப்படும் மின்மாற்றிகள் இதுவரை 18 வரை அமைத்துள்ளோம். இவை இல்லாமல் வேறு பகுதிகளில் 23 மின்மாற்றிகளை புதியதாக அமைத்துள்ளோம்.

இதனால் குறைந்த அழுத்த மின்சாரம் என்ற பிரச்சினையே இல்லை. நிலையான மின்சாரத்தை இந்தப் பகுதிகள் இந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் பெற்றுள்ளன. இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தல் பேரில் மாதம் ஒருமுறை பரிசோதனை என்பதைக் கட்டாயமாக்கி இருக்கிறோம்.

ஆகவே பெரும் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சின்ன பிரச்சினை என்ற அளவிலேயே பல வேலைகள் சரிசெய்யப்பட்டும் உள்ளது" என்கிறார்.

பொதுமக்கள் அடைந்த சந்தோஷம்:

பொதுமக்கள் அடைந்த சந்தோஷம்:

உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், "எங்கள் பகுதியில் உள்ள ரெயில்வே தெருவில் மின்மாற்றிகளை புதியதாக அமைத்துக் குறைந்த மின் அழுத்தம் இல்லாமல் செய்துள்ளோம். அதேபோல் பல புதிய பகுதிகளுக்கு மின் பாதையை அமைத்துள்ளோம். அதாவது இரண்டு 11 கேவி மின் பாதைகளை புதியதாக நிறுவியுள்ளோம். இந்த வேலைகள் அனைத்தும் இந்த ஒன்றரை ஆண்டில் செய்யப்பட்ட மாற்றங்கள்" என்கிறார்

முன்பு 150 குடும்பங்கள் வரை இருந்த பகுதியில் இப்போது 500 குடும்பங்கள் வரை வளர்ந்துள்ளன. ஆனால், பழைய அதே மின் பாதைகளைக் கொண்டே மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததால் அடிக்கடி மின்கசிவு போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளன.

அதைச் சரியாகக் கண்டறிந்து இப்போது அனைத்து மின் உபகரணங்களையும் மாற்றியதால், முன்பைப்போல மின்சார தடையோ அல்லது கசிவோ ஏற்படுவதில்லை என்கிறார்கள் இந்தக் காஞ்சிபுரம் வாழ் பெண்மணிகள்.

உதவி செயற்பொறியாளர் இளைய ராஜன், "இந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் இதுவரை பழுதான 300 மின் கம்பங்களை மாற்றி அமைத்துள்ளோம். நகரில் முக்கியமான மூன்று பகுதிகளில் குறைந்த மின் அழுத்தப் பிரச்சினை இருந்துவந்தது. அதைப் போக்க 63 கேவி மின்மாற்றி, 100 கேவி மாற்றிகளை அமைத்துச் சரி செய்து கொடுத்துள்ளோம்.

இது கோயில் நகரம் என்பதால் அடிக்கடி தேர்த்திருவிழாக்கள் நடைபெறும். உயர் அழுத்த மின் பாதைகள் அனைத்தையும் பூமிக்கு அடியில் செல்லக்கூடிய பாதைகளாக மாற்றத் திட்டம் வகுத்து வருகிறோம்.

இதுவரை காஞ்சிபுரத்தில் மட்டும் 38 ஆர்.எம்.யுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் கூடுதலாக இதை அமைத்தால் மேலும் மின்சார வழங்கலைச் சிறப்பாக்கலாம் எனத் திட்டமிட்டு வருகிறோம். மேலும் 24 ஃபீட்டர்களை ஒன்றிணைத்துள்ளோம்.

அதனால் ஒன்று பழுதானாலும், மற்றொன்றிலிருந்து மின்சாரம் வழங்கப்படும் அளவுக்கு தொழில்நுட்பத்துத்தை உயர்த்தி உள்ளோம். இந்த மாற்றத்தால், இன்று மின் துறையை பொறுத்தளவில் காஞ்சிபுரம் என்பது சென்னை நகரத்திற்கு இணையாக மாற்றப்பட்டு வருகிறது" என்கிறார்

10 நாள்களில் முதல்வர் ஸ்டாலின் செய்த மாற்றம்:

10 நாள்களில் முதல்வர் ஸ்டாலின் செய்த மாற்றம்:

சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன், "இந்தப் பகுதிக்கு சில மின்மாற்றிகள் தேவை என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அப்படிச் சொன்ன 10 நாள்களில் எங்களுக்குத் தேவையான மின்மாற்றிகளை உடனே முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

கொரோனா சிகிச்சைக்காக விளையாட்டு மைதானத்தில் அமைத்தோம். அப்போது அதற்காகவே தனி டிரான்ஸ்ஃபார்மர் அமைத்துதர உத்தரவிட்டார் முதல்வர். அதைக் கொண்டு நாங்கள் அந்த நெருக்கடிக் காலத்தைச் சமாளித்தோம். அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டு காஞ்சியில் பட்டுப் பூங்கா அமைக்கத் திட்டமிட்டோம்.

ஆனால், அதிமுக அதனைச் செயல்படுத்தவில்லை. இப்போது ஆயிரம் நெசவாளர்கள் வாழ்வை உயர்த்தும் வகையில் அப்பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதற்காகவே தனி துணைமின் நிலையம் அமைத்து வருகிறோம்.

இந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக என் தொகுதியில் 46 மின்மாற்றிகளை புதியதாகத் தரம் உயர்த்தி அமைத்துள்ளோம். அதேபோல் வெங்கடாபுரம் பகுதியில் 18 ஆண்டுகளாகக் குறைந்த மின் அழுத்தப் பிரச்சினை இருந்தது. அதை முழுதாக ஒழித்துள்ளோம்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+