Cognizant Bonus: 100% போனஸ்.. காக்னிசண்ட் ஊழியர்களுக்கு அடித்த ‛மெகா ஜாக்பாட்'.. ஊழியர்கள் ஹேப்பியோ ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 100 சதவீதம் போனஸை அறிவித்துள்ளது. நிறுவனம் நிர்ணயித்த இலக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே எட்டப்பட்ட நிலையில் ஊழியர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் (Cognizant Technology Solutions Corporation) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் அலுவலகம் சென்னையில் கடந்த 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் காக்னிசண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 100 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுபற்றி நிறுவனத்தின் சிஇஓ ரவிகுமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து ஊழியர்களுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார்.

அதில், ‛‛2025ம் ஆண்டில் உங்களின் கடின உழைப்பு, சீரான செயல்பாடு, பணிக்கான அர்ப்பணிப்பு உணர்வு உள்ளிட்டவற்றின் நேரடி பலன் வழங்கப்படுகிறது. உங்களின் உழைப்புக்கு நன்றி. எங்களின் விருப்ப போனஸாக 100 சதவீதம் வழங்கப்பட உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

இந்த போனஸ் என்பது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாகும். இதனால் ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி ஊழியர்கள் கடின உழைப்பை வழங்கினால் அதற்கான பலனை நிச்சயம் நிறுவனம் கொடுக்கும் என்பதை காக்னிசண்ட் வெளிப்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் காக்னிசண்ட் நிறுவனம் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. குறிப்பாக சிஇஓவாக பிரையன் ஹம்ப்ரீஸ் இருந்தபோது ஊழியர்களின் பணி நீக்கம் தொடர்ந்தது.

ஆனால் தற்போது சிஇஓவாக ரவிக்குமார் உள்ளார். ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் இந்த வேலையில் அவர் அத்தகைய முடிவை கைவிட்டு ஊழியர்களின் உழைப்புக்கு மதிப்பளித்து 100 சதவீத போனஸை அறிவித்துள்ளார். இது அனைத்து தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+