அவ்வளவுதான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க..கங்குவாவை கதறவிடும் பாமக! ’குரு’ மேட்டர் தான் காரணம்.!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை நெட்டிசன்களும் சினிமா ரசிகர்களும் ரோஸ்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெய்பீம் பட சர்ச்சைக்காக பாமகவினரும், ஜோதிகாவின் கோவில் குறித்த பேச்சுக்காக பாஜகவினரும் கங்குவா படத்தை மிகக் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
சிறுத்தை, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் இயக்கி வெற்றி பெற்றசிறுத்தை சிவா இயக்கத்தில் முதன்முறையாக சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் பல்வேறு தடைகள் பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 14ஆம் தேதியான நேற்று வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அப்போது வேட்டையன் படத்தின் ரிலீஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு படம் வெளியாகியுள்ளது.
வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படம், இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நவம்பர் 14 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு,, தொடர்ந்து படத்துக்கான பிரமோஷன் பணிகளில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். படம் 2000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நம்பிக்கையை தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் ரிசல்ட் மிக மோசமாக வந்திருக்கிறது.
நேற்று தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன கங்குவா படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்து கொண்டிருக்கிறது. பாகுபலி ரேஞ்சுக்கு படம் இருக்கும் என பில்டப் கொடுத்த நிலையில் காது வலி தான் மிச்சம் என விமர்சிக்கின்றனர் சினிமா ரசிகர்கள். படம் முழுவதும் சூர்யா கத்திக் கொண்டே இருக்கிறார், ஒரே இரைச்சலாக இருக்கிறது என பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. நெட்டிசன்களும் தங்குள் பங்குக்கு படத்தை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கங்குவா படத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பாமகவினரும் பாஜகவினரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
என்ன நடந்தது என விசாரித்த போது தான் பழைய மேட்டரை கையில் எடுத்திருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. ஜெய் பீம் படம் சூர்யா நடிப்பில் ஓடிடி-டியில் வெளியானது. அந்த படத்தில் வில்லன் சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் குரு என அழைக்கப்பட்டு இருந்தது. அதில் பிரச்சனை இல்லை. ஆனால் குருவின் வீட்டில் வன்னியர் சங்க சின்னமான அக்னி கலசம் இடம்பெற்று இருந்த காலண்டர் வைக்கப்பட்டிருந்தது. இதனால் கோபமான பாமகவினர் நேரடியாக அந்த படத்தை கடுமையாக விமர்சித்தனர்.
சூர்யா உள்ளிட்ட படக் குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அடுத்ததாக அந்த காலண்டர் மறைக்கப்பட்டது. ஆனாலும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது படத்தை படமாக பாருங்கள் என சூர்யா பேசியிருந்தார். இதனால் தற்போது கங்குவா படத்தை பாமகவினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சுமார் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு திரையரங்கில் சூர்யாவின் படம் வெளியாகி இருக்கும் நிலையில் பாமகவிற்கு வசதியாக போய்விட்டது. இதனால் ஜெய் பீம் படத்திற்கு பழிவாங்குவது போல கங்குவா படத்தை விமர்சித்து வருகின்றனர்.
மற்றொரு பக்கம் பாஜகவினரும் தங்கள் பங்குக்கு படத்தை விமர்சித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா, கோவில் கட்ட வேண்டிய இடத்தில் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் கட்டலாம் என பேசுனார். ஏன் சர்ச் வசூலில் கட்ட வேண்டிய பணத்தில் மருத்துவமனை கட்டலாம் என பேச வேண்டியதுதானே என பாஜக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் கங்குவா படத்தை பார்க்க செலவாகும் பணத்தில் பள்ளிகளுக்கு ஏன் உதவ கூடாது என பாஜகவினர் கூறி வந்தனர்.
உச்சமாக பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் ஒரு படி மேலே போய் சிவானந்தா குருகுலத்திற்கு 300 ரூபாயை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அது கங்குவா படத்தை பார்ப்பதற்காக வைத்திருந்த பணம் என ஸ்க்ரீன்ஷாட்டோடு பதிவிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து தேர்தல் கூட்டணி போலவே, இணைந்து பாஜகவினரும் பாமகவினரும் சேர்ந்து கங்குவா படத்தை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications