Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூர்யாவின் கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு சதி நடக்கிறதா.. ஒட்டுமொத்தமாக குறை சொல்வதன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு சதி நடப்பதாகவும், சூர்யா நடித்துள்ள இந்த படத்தை குறை சொல்வதன் பின்னணியில் சிலர் இருப்பதாகவும் சூர்யாவின் ரசிகர்கள் குமுறுகிறார்கள். உங்களுக்கு ஒரு படத்தை பிடிக்காமல் போக ஆயிரம் காரணம் இருக்கலாம்.. ஆனால் பழிவாங்கும் நோக்கில், பல 100 பேரின் உழைப்பில் உருவான படத்தை ஓடவே விடக்கூடாது என்பது போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவது தமிழ் சினிமாவிற்கு ஆபத்தானது என்பதே சினிமாவை நேசிக்கும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ஞானவேல்ராஜா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.இந்த திரைப்படத்தின் பேன்டஸியில் இருக்கிறது. கதை இப்போது மற்றும் 1070களில் நடப்பது போன்று உள்ளது. இதில் கங்குவா, பிரான்சிஸ் என இரண்டு கெட்டப்களில் வருகிறார் சூர்யா. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் காட்சிகள், அதற்காக போட்ட சூர்யாவின் உழைப்பு எல்லாவற்றையும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அதேநேரம் இந்த படம் இரு வேறு காலக்கட்டத்தில் நடப்பதால், கதையை சொல்வதில் உள்ள குழப்பம் இருந்ததாகவும், தவிர்க்க திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

kanguva suriya tamil cinema


சரி விஷயத்திற்கு வருவோம்.. ஒட்டுமொத்தமாக படம் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அந்த கருத்துக்களை வெளிப்படுத்த எல்லாருக்குமே உரிமை உள்ளது. ஆனால் கங்குவா படத்திற்கு எதிராக நடப்பதை பார்த்தால் நிச்சயம் இது திட்டமிட்ட சதி என்றே தெரிவதாக சூர்யா ரசிகர்கள் குமுறுகிறார்கள்.. உங்களுக்கு ஒரு படத்தை பிடிக்காமல் போக ஆயிரம் காரணம் இருக்கலாம்.. ஆனால் பழிவாங்கும் நோக்கில், பல 100 பேரின் உழைப்பில் உருவான படத்தை ஓடவே விடக்கூடாது என்பது போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவது தமிழ் சினிமாவிற்கு ஆபத்தானது என்கிறார்கள்..


யூடியூப், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கங்குவா திரைப்படம் குறித்து வைக்கப்படும் விமர்சனங்கள் அதிர்ச்சிரகம். இப்படி எல்லாம் மிகவும் கேவலமான வார்த்தைகளால் சூர்யாவையும் படத்தை தயாரித்தவர்களையும், படத்திற்காக உழைத்தவர்களையும் விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயமே இல்லை.. ஒரு படத்தில் இந்த இடத்தில் சரியில்லை.. அந்த இடத்தில் சரியில்லை.. இன்னும் வேறுமாதிரி எடுத்திருந்தால் நன்றாக இருக்கும். இந்த காட்சிகள் இப்படி இருந்தது என்று சொல்வதில் தவறு இல்லை.. ஆனால் விமர்சனம் என்ற பெயரில், மிகவும் அருவருப்பான வார்தைதைகளில் தனி மனித தாக்குதல்கள் நடத்தப்படுவது இதுவரை இல்லாத ஒன்று. அதையும் சமூக ஊடகங்கள் வியூஸ் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் வெளியிடுவது எந்த வகையிலும் சரியானது அல்ல..

ஒருவர் நண்பர்களுடன் படத்திற்கு வந்துள்ளார். இன்னொரு முதியவர் தனியாக வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் நடிகர் சூர்யா குறித்து படத்தின் கலைஞர்கள் குறித்தும் மிகவும் அறுவறுப்பான மொழியில் பேசியுள்ளார்கள். இந்த இருவரின் வீடியோக்கள் தான் ட்விட்டரில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள சூர்யா ரசிகர்கள்... "படம் வந்து நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. உங்களுக்கு எந்த சீன் பிடிச்சிருக்கு.. எந்த சீன் பிடிக்கலை.. எது ஒர்க்அவுட் ஆச்சு.. எது ஒர்க்அவுட் ஆகலை என்பதை மட்டும் தான் சொல்ல வேண்டும். அதைவிட்டு விட்டு.. என்ன வார்த்தை இதெல்லாம்.. உங்கள் வீட்டில் இப்படித்தான் பேச கற்றுக்கொடுத்தார்களா.. இந்த படத்தை நல்ல தியேட்டரில் பார்க்கும் போது..சத்தம் தெளிவாகவே இருந்தது. போர் சீன் காட்சிகளில் சரியாகவே இருந்தது. படமே நன்றாக இல்லை என்றாலும் இப்படி பேசக்கூடாது.. 200 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறீர்கள் என்பதற்காக உங்கள் வாயில் வரும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.." என்று சூர்யா ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

ரசிர்கள் இப்படி என்றால், சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் வந்த காட்சிகள், தஞ்சாவூர் மருத்துவனை குறித்து ஜோதிகா பேசிய வார்த்தைகளால் கோபம் அடைந்தவர்களும் கங்குவா படத்திற்காக எதிராக கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். திமுக ஆதரவு நிலையில் சூர்யா குடும்பம் உள்ளதாக கூறி, அரசியல் கட்சியினரும் கங்குவா படத்திற்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒரு படம் உங்களுக்கு பிடிக்கலாம்.. பிடிக்காமல் போகலாம்.. ஆனால் அந்த படத்தை எந்த வகையிலும் ஓடவே விடக்கூடாது என்கிற பழிவாங்கும் நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுவதும்.. படத்தில் நடித்தவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவதும் தமிழ் சினிமாவிற்கே ஆபத்தானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+