சல்லி சல்லியா நொறுக்கீட்டீங்களேய்யா.. சூர்யாவை ஓரம் கட்டும் எஸ்கே! தியேட்டர்களில் கெத்தாக அமரன்..!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில் நெகட்டிவ் ரிவ்யூகள் காரணமாக ரசிகர்கள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான திரையரங்குகளில் அமரன் படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படம் நேற்று வெளியானது. திசா பதானி, கார்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சுமார் 300 கோடி பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருந்தார். இதுவரை தயாரான படங்களிலேயே அதிக பட்ஜெட் கொண்ட சூர்யாவின் படம் என்றால் அது கங்குவா தான். முன்னதாக அக்டோபர் மாதமே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் காரணமாக பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளை ஞானவேல் ராஜா, சூர்யா மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக சூர்யா இந்தியா முழுவதும் பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து படத்துக்கு புரமோஷன் செய்தார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா பேசும்போது 2000 கோடி ரூபாய் கலெக்ஷனை எதிர்பார்க்கிறோம். 2000 கோடி நிச்சயம் வசூல் செய்யும். டிசம்பர் மாதமே படத்துக்கான வெற்றி விழா நடக்கும். தற்போது வைத்திருக்கும் பாஸை நீங்கள் வெற்றி விழாவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என பேசி இருந்தார்.
ஓவர் பிரமோஷன் உடம்புக்கு ஆகாது என்பது போல தற்போது படம் வெளி வந்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படத்தில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது, தலை வலிக்கிறது போன்ற நெகடிவ் ரிவ்யூக்களை பார்க்க முடிகிறது. மேலும் சிஜி வேலையும் எடுபடவில்லை என்கின்றனர் ரசிகர்கள். தொடர்ந்து படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சில ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது பொறுமையாக அமர்ந்து பார்த்தால் கதை புரியும் எனக் கூறி வருகின்றனர்.
இப்படியாக பாசிட்டிவ் ரிவ்யூக்களை விட நெகட்டிவ் ரிவ்யூகள் அதிகமாக வருவதால் படத்தின் வசூல் இரண்டாவது நாளில் தடாலடியாக சரிந்திருக்கிறது. இந்த நிலையில் பெரும்பாலான மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் உள்ள திரைகளில் தற்போது கங்குவா படத்தை நீக்கிவிட்டு சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை திரையிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அமரன் படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சில அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் படத்துக்கு கூடுதல் பப்ளிசிட்டி கிடைத்தது.
கங்குவா படம் வெளியான போது கூட அமரன் படத்தை தூக்க நிறைய திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். இதனால் கங்குவா படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லை. மேலும் அமரன் திரைப்படம் வசூலில் சக்கை போட்டு வரும் நிலையில் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் தியேட்டர்களில் இன்னும் ஓடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுவரும் நிலையில் இரண்டாம் நாளிலேயே திரையரங்குகளில் இருந்து காட்சிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அமரன் திரைப்படத்தை கூடுதல் காட்சிகளாக திரையரங்க உரிமையாளர்கள் போட்டு வருகிறார்கள். 2011ல் கேரியரின் உச்சத்தில் சூர்யா இருந்தார். அப்போதுதான் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்து இருந்தார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. அதே நேரத்தில், தான் அறிமுகமானபோது உச்சத்தில் இருந்த சூர்யாவை பின்னுக்குத் தள்ளி அவரது படத்தை தூக்கிவிட்டு ஏற்கனவே ரிலீசான தனது படத்தை ஓடும் அளவுக்கு சிவகார்த்திகேயனின் வளர்ச்சி இருப்பதாக கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications