ப்பா.. என்னா ஸ்பீடு.. "தலைகளையே" ஓவர்டேக் செய்த கனிமொழி.. அப்படியே வியந்து பார்க்கும் திமுகவினர்..!
திமுக எம்பி கனிமொழியின் பிரச்சாரங்கள் வெற்றிக்கு கைதந்துள்ளன
சென்னை: திமுகவின் எம்பி கனிமொழி முன்னெடுத்த பிரச்சாரங்களே, இன்று அக்கட்சியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதாக பார்க்கப்பட்டு வருகிறது..!
இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்றுதான் திமுக தலைவர் ஆரம்பம் முதலே முனைப்பு காட்டி வந்தார்.
உங்கள் ஊரில் ஸ்டாலின், கிராம சபை கூட்டம் என பல்வேறு பெயர்களில் தமிழகம் முழுக்க வலம் வந்து மக்களின் குறைகளை கேட்ட ஸ்டாலின், இறுதியாக தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார்..

ஸ்டாலின்
கடந்த மார்ச் 15-ம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தை ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளிலும், என 21 நாட்களில் 70 கூட்டங்களில் பேசி உள்ளார்.. அதாவது 12 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்தார். காலையில் ஒரு ஊர் என்றால், சாயங்காலம் மு க ஸ்டாலின் வேறு ஒரு ஊரில் இருப்பார்.. அந்த அளவுக்கு சுழன்று சுழன்று பிரச்சாரத்தை முடித்தார்.

மாவட்டம்
இப்போது திமுக எம்பி கனிமொழியின் பிரச்சாரம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.. 30 மாவட்டங்களில், 117 சட்டசபை தொகுதிகளிலும், 100 பேரூராட்சிகளிலும், வாகனத்தில் சென்று பிரசாரம் செய்துள்ளார்.. மொத்தம், 8,000 கிமீ பயணம் செய்துள்ளாராம். 5 மாதங்களில் 100 நாட்கள் பிரசாரம் செய்து, மொத்தம், 550 கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

பெண்கள்
எப்போதுமே அதிமுகவுக்கு சாதகமாகவே பெண்கள் ஓட்டு விழும் என்பதால், இதை முறியடிக்கவே மகளிர் அணி மாநில செயலாளரான கனிமொழியை முன்கூட்டியே பிரச்சாரத்தில் களமிறக்கப்பட்டாராம்.. இதனால், அவரோ, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 2020 டிசம்பர் முதல் வாரத்திலேயே, பிரசாரத்தை துவக்கி விட்டார். மீனவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், நெசவாளர்கள் என, பல தரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார்...

அருந்ததியினர்
பல பெண்கள் தாங்களாகவே முன்வந்து, பல பிரச்சனைகள் கனிமொழியிடம் மனம்விட்டு சொல்லியும் உள்ளனர்.. குறிப்பாக, தர்மபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து கொண்டே இருந்தது.. அப்போது, கனிமொழியிடம் ஒரு பெண், "நாங்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆனால் எங்களை எல்லாத்திலும் புறக்கணிக்கிறார்கள் என்று வருத்தத்துடன் சொன்னார்..இதை கேட்டதும் கனிமொழி மேடையில் இருந்து எழுந்து வந்து அந்த பெண்ணை கட்டி அணைத்து கொண்டார்.. இப்படி பெண்களின் ஆதரவு திமுகவுக்கு பெரும் பலத்தை தந்து கொண்டே வந்தது.

பெண்கள்
அன்று ஜெயலலிதா இருந்தபோது, பெண்கள் வாக்கு பெரும்பாலும் அவருக்குதான் போகும்.. இன்று பெண்களை கவர, கனிமொழி அந்த இடத்துக்கு வந்துவிட்டார்.. அது அபரிமிதமாகவே ஒர்க் அவுட் ஆகியும் உள்ளது.. இறுதியில், பெண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டதாலேயே திமுக அதிக இடங்களை கைப்பற்றியும் உள்ளது.. இதனால் கனிமொழிக்கான முக்கியத்துவம் கட்சிக்குள் கூடிக் கொண்டே வருகிறது..!
-
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!












Click it and Unblock the Notifications