மைலாப்பூரில் வாக்களித்த கனிமொழி.. மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்
Recommended Video
சென்னை: இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சிறப்பான வெற்றியினை பெறும் என்று கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி சென்னை மைலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று வாக்களித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, "இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் சிறப்பான வெற்றி பெறுவார்கள். அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என்றார்.
பல இடங்களில் வாக்குச்சவாடி பிரச்னை இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் சரி செய்து வருவதாக சொல்கிறார்கள். உண்மையில் வாக்கு எந்திரத்தில் பிரச்னையா அல்லது வேறு பிரச்னை இருக்கிறதா என்பதை பார்ப்போம்" என்றார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, ஆட்சியாளர்களின் கூட்டணி கட்சியாக குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிப்போல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றார்.
தூத்துக்குடியில் வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். சுமூகமாக நடப்பதாக சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications