கனிமொழி அசத்தல்.. தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவரானார்.. அவங்களே சொல்லிட்டாங்க.. அதென்ன "குறியீடு"
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழியின், ட்விட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தமிழ் நாட்டில் அரசு மற்றும் பன்னாட்டு அரசின் நிறுவன குறியை பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகியுள்ளார்.

ப்ளூ டிக் - க்ரே டிக்: ட்விட்டரை பொறுத்தவரை, "ப்ளூ டிக்" உள்ள கணக்குகள் அதிகாரப்பூர்வமானவை என்ற நடைமுறை இருந்து வருகிறது... அதாவது, ப்ளூ டிக் என்பது பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கொண்டவர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் நில நிற குறியீட்டை கொடுக்கும். இதைவைத்துதான், முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் அடையாளம் காணப்படுகின்றன. இதைவைத்துதான், லட்சக்கணக்கானோர் இதுபோன்ற பிரபலங்களை பின்தொடர்ந்து வருகின்றனர்..
ஆனால், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபிறகு, ப்ளூ டிக்கிற்கு சந்தா வசூலிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.. மேலும், எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார். 600 முதல் 900 சந்தா செலுத்த வேண்டும் என்று சொல்லி, காலக்கெடுவையும் விதித்தார்..
ப்ளூ டிக்: பின்னர், சந்தா செலுத்தவில்லை என்று சொல்லி, உலகம் முழுவதும் ஏராளமான பிரபலங்களின் பெயர்களுக்கு பின்னால் இருந்த ப்ளூ டிக்கையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கிவிட்டது.. குறிப்பாக இந்தியாவில், ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சல்மான்கான், ஷாரூக்கான், அமிதாப் பச்சன், ஆலியா பட் இப்படி ஏராளமானோரின் பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டன.. அவ்வளவு ஏன், போப் பிரான்சிஸ் முதல், விராட் கோலி, ரோஹித் ஷர்மா வரையிலான அவர்களின் ப்ளூ டிக்குகளும் நீக்கப்பட்டன.
அதாவது, 600 முதல் 900 ரூபாய் வரை சந்தா கட்டவில்லை என்பதால்தான், ப்ளூ டிக் நீக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் அப்போது விளக்கம் அளித்திருந்தது... இதற்கு பிறகு, ஏராளமானோர், சந்தா செலுத்தி ப்ளூ டிக்கை மறுபடியும் மீட்டெடுத்து வருகிறார்கள்.. அதன்படி, முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டவர்கள் சந்தா செலுத்தி ப்ளூ டிக்கை பெற்றுக்கொண்டனர். இந்தநிலையில், திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் "க்ரே டிக்" பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராகியுள்ளார்.
கனிமொழி: ட்விட்டர் நிறுவனம் நீலம் நிறம் நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கும், சாம்பல் ( கிரே) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார்/ பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறுவனக் குறிப்பு பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகியுள்ளார். கனிமொழி "க்ரே டிக்" வாங்கி தனது ஆளுமையை நிரூபித்துள்ளார் என நெட்டிசன்கள் இதை ஷேர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications