பாஜகவின் கிளை தான் தவெக.. முதல்முறையாக விஜய் உண்மையை பேசியதற்கு வாழ்த்துக்கள்.. கனிமொழி கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: பாஜகவின் ஒரு கிளை தான் தவெக என்று விஜய் அவர் வாயாலேயே ஒப்புக் கொண்டதற்காக வாழ்த்துக்கள் என்று திமுக எம்பி கனிமொழி கிண்டல் செய்துள்ளார். முதல்முறையாக விஜய் உண்மையை பேசியதற்காக வாழ்த்துக்கள் என்று கூறிய கனிமொழி, அவர் உண்மையை பேச கற்றுக் கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் விஜய் பேசுகையில், தவெக புதிதாக ஒரு பிரான்ச் ஓபன் செய்திருக்கிறது. அந்த பிரான்ச் முதலில் பாஜகவின் கிளையாக இருந்தது. இப்போது திமுகவின் கிளையாகவும் மாறிவிட்டது. இவர்கள் பேசுவதை அவர்களும் பேசுவார்கள்.

Kanimozhi

இவர்கள் என்ன அறிக்கை விடுவார்களோ, அவர்களும் அதே அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார். பாஜகவின் ஒரு கிளைக் கட்சி தான் தவெக என்று விஜய்யே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கையில் எடுத்துள்ளன.

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கனிமொழி பேசுகையில், மதுராந்தகம் தொகுதியில் விஜய் பேசும் போது டெல்லி பாஜகவின் இன்னொரு வடிவம் தான் தமிழ்நாட்டில் திமுக என்று தெரிவித்தார். ஆனால் இன்று பாஜகவின் கிளை தான் தவெக என்று அவர் வாயாலேயே விஜய் சொல்லி இருக்கிறார்.

அதனால் விஜய் உண்மையை சொன்னதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஸ்வீட் ப்ரோ விஜய்க்கு வாழ்த்துக்கள்.. ஏனென்றால் முதல்முறையாக விஜய் உண்மையை பேசி இருக்கிறார். அவர் உண்மையை பேச கற்றுக் கொள்ளட்டும். நாம் நமது வேலையை செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. விஜய்யை ஸ்வீட் ப்ரோ என்றும், முதல்முறையாக உண்மையை பேசியுள்ளார் என்று கனிமொழி கிண்டல் செய்துள்ளார். அதேபோல் விஜய்யின் இந்த உளறல் பேச்சால் தவெகவினர் சோகம் அடைந்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+