கனிமொழிக்கு வந்த செம கோபம்.. "அழகற்ற பெண்ணா? டவுரியா?.. முதல்ல அதை எடுங்க".. மிரண்டு பார்க்கும் பாஜக
கனிமொழி சர்ச்சை பாடத்திட்டம் குறித்து கண்டன ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: திமுக எம்பி கனிமொழி, கடுமையான கோபத்துடன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. இது பாஜக தரப்பை அதிர வைத்து வருகிறது.
எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், கல்வி அறிவு பெருகினாலும், இன்னமும் பெரும்பாலான மனித மனங்களின் அழுக்குகள் நீங்கவே இல்லை.
குறிப்பாக, வரதட்சணை கொடுமை இன்னமும் நீண்டு கொண்டே வருகிறது.. இதனால் ஏற்படும் குற்றங்களும் குறைந்தபாடில்லை.

ஆவணக் காப்பகம்
தினமும் ஏதாவது ஒரு அப்பாவி பெண், இந்த வரதட்சணையால் பற்றி எரிந்து கருகி வருகிறாள்.. கடந்த 2020-ம் ஆண்டை எடுத்து கொண்டால், வரதட்சணை கொடுமை காரணமாக தினமும் சராசரியாக 20 பெண்கள் உயிரிழப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒரு கணக்கு சொல்லியிருந்தது.. இதில் கொடுமை என்னவென்றால், பெரும்பாலான வரதட்சணை கொடுமைகள் உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில்தான் ஏற்படுகிறதாம்.

குழப்பம் - கலக்கம்
இதற்கு காரணம், வடமாநில மக்களுக்கு அடிப்படை கல்விகூட இல்லை என்பதுதான்.. மதரீதியான உணர்வுகள் அவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதும்தான்.. இதையெல்லாம் எப்படி நீக்குவது என்ற குழப்பமும், கலக்கமும் சூழ்ந்து வரும் நிலையில்தான், ஒரு ஷாக் சம்பவம் இதே வடமாநிலத்தில் நடந்துள்ளது.. நர்ஸ் கோர்ஸை எடுத்து படிக்கும் மாணவ / மாணவிகளுக்கான சமூகவியல் பாடப் புத்தகத்தில், சில சர்ச்சை கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது..

அழகற்ற பெண்கள்
"வரதட்சணையின் பலன்கள் என்ற தலைப்பில் அதில் கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன... டி.கே.இந்திராணி என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.. இந்திய செவிலியர் கவுன்சில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாக அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதாவது, வரதட்சணை மூலம் புதிய பர்னிச்சர்கள், ப்ரிட்ஜ்கள், பைக்குகள், கார்கள் உள்ளிட்ட சாதனங்கள் கிடைக்கும்.. அழகற்ற பெண்களுக்குக்கூட கல்யாணமாவதற்கு வரதட்சணை முறை உதவுகிறது என்று அந்த பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

கனிமொழி கோபம்
இப்படி ஒரு பிற்போக்கான கருத்து, பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதுகுறித்த ஒரு போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.. படிக்கும் பிள்ளைகளுக்கு இப்படியெல்லாம் நஞ்சை புகுத்துவதா? பாடப் புத்தகத்தில் இவ்வளவு மோசமான கருத்துகள் இடம்பெறுவதா? என்று ட்விட்டர்வாசிகள் கொந்தளித்து போயுள்ளனர்.. அந்த வகையில், திமுக எம்பி கனிமொழியும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்..

நர்சிங் கோர்ஸ்
இந்திய நர்சிங் கவுன்சில் அங்கீகரித்த பாடத்திட்டத்தில் இதுபோன்ற பெண் வெறுப்பு மற்றும் பிற்போக்குத்தனமான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் சர்ச்சைக்குரிய பாடப்பிரிவின் உள்ளடக்கத்தை நீக்குவதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் இப்படி ஒரு பாடத்திட்டத்தை தயாரித்தவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

உலுக்கிய கேரளா
இப்படித்தான், கடந்த வருடம் கேரளாவில் நிறைய வரதட்சணை கொடுமைகள் நடந்தன.. அடுத்தடுத்து 3 இளம்பெண்கள் திடீரென உயிரிழந்தனர்.. இந்த 3 பெண்களுமே 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள்.. 3 பெண்களுமே மர்மமான முறையில் இறந்தனர்.. 3 பெண்களுக்குமே வரதட்சணை கொடுமை இருந்தது.. படித்த மாநிலம் என்று கூறப்படும் கேரளாவில் நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிவிட்டது. அப்போதும் கனிமொழி தன்னுடைய கோபத்தை பதிவு செய்திருந்தார்.

பிற்போக்குத்தனம்
"இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார்.ஆனாலும் இந்தியக் குடும்பங்கள் இந்த வழக்கத்தை நிறுத்தியபாடில்லை... நம் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்கும் போது அவர்கள் சுயமரியாதையோடு பாதுகாப்பாய் இருப்பது முக்கியம் என்பதை உணரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்நிலையில், இன்று மீண்டும் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளார்.. மத்திய அரசு இதற்கு எப்படி ரியாக்ட் செய்ய போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், பிற்போக்குத்தனம் நீங்குவதற்கு கல்வி உதவும் என்று பார்த்தால், அந்த கல்வியிலேயே பிற்போக்குத்தனத்தை புகுத்த நினைப்பதை என்னவென்று நாம் சொல்வது!?
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா












Click it and Unblock the Notifications