கனிமொழிக்கு முக்கியத்துவம்.. அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்த மரியாதை.. மாற்றங்களை தொடங்கிய திமுக!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தனியறை அளிக்கப்பட்டதை போல், தற்போது கனிமொழிக்கும் தனியறை அளிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அலுலக அறையில் கனிமொழியை முதல்வர் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். இதன் காரணமாக திமுகவில் கனிமொழிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஆளுங்கட்சியான திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை, உடன்பிறப்பே வா என்ற அழைப்பின் மூலமாக சந்தித்து வருகிறார். கடந்த முறை திமுக சறுக்கிய தொகுதிகளை குறி வைத்து முதற்கட்ட சந்திப்புகள் நடந்து வருகின்றன.

திமுக நிர்வாகிகள் சொல்லும் விஷயங்கள், பிரச்சனைகளை பென் நிறுவன நிர்வாகிகளும் நோட் செய்து வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு 2 வாரத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பாக கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முடிவுகளை பார்வையிட்டு அதற்கேற்ப தேர்தல் யுக்திகளை திமுக வகுத்து வருகிறது.
அதேபோல் திமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்திருக்கிறார். அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் அண்ணா அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளரான கே.என்.நேருவுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கே.என்.நேருவை அழைத்து சென்று முதல்வர் ஸ்டாலின் அவரது இருக்கையில் அமர வைத்தார். இந்த நிலையில் தற்போது திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழிக்கு அண்ணா அறிவாலயத்தில் தனியறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக கனிமொழிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலக அறையில் முதல்வர் ஸ்டாலின் அழைத்து சென்று அமர வைத்திருக்கிறார்.
இதன் மூலமாக கனிமொழிக்கு திமுகவில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவின் டெல்லி முகமாக கனிமொழி பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாஜகவினரும் கனிமொழிக்கு உரிய மரியாதையை அளித்து வருகின்றனர். இதனால் திமுக உயர்மட்ட குழுவில் மாற்றங்கள் நடந்து வருவதாக பார்க்கப்படுகிறது.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு












Click it and Unblock the Notifications