“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாறணும்?” நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அயோத்தி போல தமிழ்நாடு மாறுவதில் தவறில்லை என பேசிய நயினார் ராகேந்திரனுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி தெரிவித்துள்ளார். "எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?
கவலை வேண்டாம்! அப்படித்தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது" என கனிமொழி கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "அயோத்தி இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.

kanimozhi nainar nagendran bjp

திமுக எம்.பி கனிமொழி, திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து பாஜக தமிழ்நாட்டை 'தென்னிந்திய அயோத்தியா' ஆக்க முயல்கிறது என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "அயோத்தி இந்தியாவில்தான் இருக்கிறது, தமிழகம் அதுபோல மாறினால் தவறில்லை" என்று வாதிட்டார். இது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "தீபம் ஏற்றியதில் எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு எந்த கலவரமும் ஏற்படவில்லையே. இந்த விவகாரத்தை திமுக அரசு மதக் கலவரமாக சித்தரிப்பது தவறு. இது இந்து உரிமைகளை மீறும் முயற்சி" என்று தெரிவித்தார்.

மேலும், "சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளில் திமுக ஈடுபடுகிறதா? தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ராமரின் ஆட்சி போன்று இருக்க வேண்டும். இந்து மதத்தை வலுப்படுத்தும் வகையில் அரசு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி திமுகவை அச்சுறுத்துகிறது. அதனால்தான் இதுபோன்ற விவகாரங்களைத் தூண்டி விடுகிறார்கள்" என்றும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில் தான் நயினார் ராகேந்திரனுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி தெரிவித்துள்ளார். "எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவை படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படித்தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது" என கனிமொழி தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+