Kanimozhi: தேர்தல் தோல்வி கொடுத்த பாடம்.. மனம் திறந்த கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் பிடிக்க முடிந்தது. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகளே தோல்வியடைந்தனர். திமுக தோல்வி குறித்து கனிமொழி மனம் திறந்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடினர். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டினார்கள். தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

kanimozhi-kanimozhi-opens-about-dmk-loss-in-the-tn-assembly-election

கனிமொழி பதிவு

தவெக வேட்பாளர்கள் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல முன்னாள் அமைச்சர்க்ள அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளனர். விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

தங்களின் தோல்வி குறித்து திமுக, அதிமுக தலைவர்களும் மனம் திறந்து வருகிறார்கள். திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்பை ஏற்கிறோம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர்.

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம். அரசியல் - பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம். வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+