Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது வேற... திமுக ஏன் பிரதமர் மோடியை வரவேற்கிறது தெரியுமா.. கனிமொழி தந்த நச் விளக்கம்

கனிமொழி, பிரதமர் மோடியை திமுக ஏன் வரவேற்கிறது என்ற விளக்கம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலத்தில் வந்து திட்டங்களை துவங்கி வைக்கும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் என்று சொல்லாது.. இங்கு நமக்கு திட்டங்களின் தேவைக்குதான் அரசு உள்ளது.. அரசு என்பது வேறு, கருத்தியல் என்பது வேறு என்று பிரதமரை வரவேற்கும் நிலைப்பாட்டிற்கு கனிமொழி எம்பி விளக்கம் தந்துள்ளார்.

11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க பிரதமர் மோடி, வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது..

இதையடுத்து சோஷியல் மீடியாவில், கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை சிலர் வழக்கம்போல் பதிவிட தொடங்கினர்.

 ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

ஆனால், இதற்கு திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான ஆர்எஸ் பாரதி ''தமிழகத்திற்கு விருந்தினராக வருகை தரும் மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை, திமுக எந்தக் கட்சிக்கும் எதிரியில்லை, நமது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ள நிலையில் அவர் இப்போது நமது விருந்தினர்'' என்று கூறியிருந்தார்.

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

ஆர்எஸ் பாரதியின் கருத்து பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.. அமமுகவின் டிடிவி தினகரனும் இதை பற்றி கிண்டலடித்திருந்தார்.. ''திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற திமுகவை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என திமுக போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி' என்று விமர்சித்திருந்தார்... அதேபோல இப்போது வரை பிரதமரை வரவேற்பதில் திமுகவின் நிலைப்பாடு விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.ஆர்எஸ் பாரதியின் கருத்து பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.. அமமுகவின் டிடிவி தினகரனும் இதை பற்றி கிண்டடித்திருந்தார்.. ''திடீர் ஞானோதயம் பெற்றிருக்கிற திமுகவை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என திமுக போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி வருவதற்கு இது இன்னும் ஒரு சாட்சி' என்று விமர்சித்திருந்தார்... அதேபோல இப்போது வரை பிரதமரை வரவேற்பதில் திமுகவின் நிலைப்பாடு விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.

கனிமொழி

கனிமொழி

இந்நிலையில், எம்பி கனிமொழி இதுகுறித்து ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், பிரதமர் மோடியை திமுக அரசு ஏன் வரவேற்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் தந்துள்ளார்.. இப்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் மோடியின் வருகையை எதிர்த்து குரல்கள் எழவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்..

செல்லாது

செல்லாது

அதற்கு கனிமொழி, "பிரதமர் மோடி மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க தமிழகம் வருகிறார். இதனை திமுக அரசு எதிர்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகம் வந்த போது திமுக எதிர்த்தது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். மாநிலத்தில் வந்து திட்டங்களை துவங்கி வைக்கும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் என்று சொல்லாது.. இங்கு நமக்கு திட்டங்களின் தேவைக்குதான் அரசு இருக்கு. அரசு என்பது வேறு, கருத்தியல் என்பது வேறு.

Recommended Video

    மதுரை: பாஜக பொங்கல் விழா… மோடி வருகை… மருத்துவர் சரவணன் மகிழ்ச்சி!
    அதிமுக

    அதிமுக

    கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும், ஒரு அரசு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் மக்களுக்கு எது நல்லது என்பதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளையும், சட்டங்களையும், கடந்த அதிமுக அரசு ஆதரித்தது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமை சட்டங்கள் போன்ற மத்திய அரசு கொண்டு வந்த மக்களுக்கு எதிரான சட்டங்களை அதிமுக ஆதரித்தது. திராவிட முன்னேற்ற கழகம் அதனை எதிர்த்தது. எனவே இந்த விவகாரத்தில் திமுக - அதிமுக ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்' என்றும் கனிமொழி தெளிவுபடுத்தி உள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+