கனிமொழி கணவர் அரவிந்தன் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி! நுரையீரல் தொற்றால் அவதி! தீவிர சிகிச்சை!
கணவர் அரவிந்தனை சிங்கப்பூர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக்கொள்ளும் கனிமொழி.
சென்னை: கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கனிமொழி எம்.பி.யும், அவரது மகனும் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்துக் கொள்கின்றனர்.
இதனிடையே தங்கை கனிமொழியை தினமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், அரவிந்தனின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொள்கிறார்.

கனிமொழி கணவர்
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் தொழில் நிமித்தமாக சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவருக்கு மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது. இதையடுத்து அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் பறந்த கனிமொழி
இதனிடையே இந்த தகவல் அறிந்து உடனடியாக விமானம் பிடித்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார் கனிமொழி. அங்கு மருத்துவமனையில் தங்கி தனது கணவர் அரவிந்தன் உடல்நிலையை கவனித்துக்கொள்கிறார். மருத்துவர்கள் அளித்து வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக கனிமொழியின் கணவர் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் பூரண நலம் பெற்று அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.

கனிமொழி கவலை
ஒரு பக்கம் தனது தாயார் ராஜாத்தி அம்மாளுக்கு உடல்நலக் குறைவு, மற்றொரு பக்கம் கணவர் அரவிந்தனுக்கு உடல் நலக் குறைவு என்பதால் கனிமொழி சற்று கலங்கி போய்விட்டதாக தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர். இதனிடையே தனது தங்கை கனிமொழியை தினமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அரவிந்தனின் ஹெல்த் அப்டேட்ஸ் பற்றி கேட்பதோடு தைரியமும் அளித்து வருகிறாராம்.

நலம் விசாரிப்பு
இதனால் கனிமொழி ஓரளவு தைரியமாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதனிடையே இந்த தகவல் அறிந்த கட்சியினரும், முக்கிய நிர்வாகிகளும், ஆதரவாளர்களும், கனிமொழியை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவரது கணவர் உடல்நலம் பற்றி விசாரிப்பதோடு ஊக்கமும் அளித்து வருகிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications