சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புது பதவி புது பயணம்! தேதி கேட்கும் நிர்வாகிகள்! கட்சி நிகழ்வுகளில் கனிமொழி பிஸி! ஆதரவாளர்கள் குஷி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என பரபரப்பாக காணப்படுகிறார் கனிமொழி.

கனிமொழியை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்த நிர்வாகிகள் பலரும் அவரிடம் தேதி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கருணாநிதியின் மகள் என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் எல்லோரிடமும் எளிமையாக நடந்துகொள்ளும் விதம் கனிமொழிக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது.

சாதி பெயரை வெளியே சொல்ல அவமானம்.. இந்த நிலைக்கு தமிழர்கள் வர காரணம் யார் தெரியுமா? - கனிமொழி பேச்சு!சாதி பெயரை வெளியே சொல்ல அவமானம்.. இந்த நிலைக்கு தமிழர்கள் வர காரணம் யார் தெரியுமா? - கனிமொழி பேச்சு!

கனிமொழி எம்.பி.

கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்ட பிறகு கட்சியில் அவருக்கான இமேஜ் உயர்ந்துள்ளது. புதிய பதவி புதிய பயணம் என மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறார் கனிமொழி. கல்லூரி மாணவ மாணவிகளுடன் அதிகம் கலந்துரையாடும் வகையில் அவரது நிகழ்ச்சி நிரல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் திமுக சார்பு அணிகளின் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக கனிமொழி கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்.

 சிறப்பு அழைப்பாளர்

சிறப்பு அழைப்பாளர்


அண்மையில் கூட திமுக சுற்றுச்சூழல் அணி நடத்திய நிகழ்ச்சியில் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவை எல்லாம் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஏற்ற பிறகு நடக்கும் மாற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக தனது தங்கை கனிமொழியை கர்ஜனை மொழி என முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக்குழுவில் விட்டுக்கொடுக்காமல் பேசியது அவருக்கு இன்னும் ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.

தூத்துக்குடி தொகுதி

தூத்துக்குடி தொகுதி

திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆவதற்கு முன்பு வரை தனது தூத்துக்குடி தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களில் மட்டுமே கலந்துகொண்டு வந்தார் கனிமொழி. ஆனால் தற்போது தனியார் அமைப்புகள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள், என பல தரப்பட்டோர் விடுக்கும் அழைப்பையும் ஏற்று பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் கனிமொழி. அதேபோல் செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலினின் நிர்வாகத் திறமை பற்றியும் பேசுகிறார்.

நேரில் சந்திப்பு

நேரில் சந்திப்பு

திமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் என பலரும் கனிமொழியை அவரது சிஐடி காலனி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் கனிமொழியின் இல்லம் கருணாநிதி இருந்தபோது எப்படி இருந்ததோ அதே போன்ற பரபரப்புக்கு திரும்பியிருக்கிறது.

English summary
Kanimozhi has been busy with party programs and public events after taking over as DMK Deputy General Secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X