ஆண் குழந்தைக்கு தரும் உரிமைகளை... பெண் குழந்தைக்கும் தர வேண்டும் -கனிமொழி
சென்னை: ஆண் குழந்தைக்கு தரும் உரிமைகளை பெண் குழந்தைக்கும் பெற்றோர் தர வேண்டும் என திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
பாலின சமத்துவம் என்ற தலைப்பில் பெண்களுக்கான சவால்கள் குறித்து சென்னை சமூகப்பணிகள் கல்லூரி நடத்திய கருத்தரங்கத்தில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து ஆண்களும் அந்த பணிகளை செய்ய முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார். பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளை இனி வரும் நாட்களில் துணிச்சலுடன் வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
பெண்கள் தங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தினால் மட்டுமே இலக்கை அடைய முடியும் என்றும், நம்மால் முடியாதது எதுவுமில்லை என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டால் மட்டுமே பெண்கள் சாதனைகள் புரியமுடியும் எனவும் கனிமொழி தெரிவித்தார். இந்த கருத்தரங்கத்தில் சென்னை சமூகபணிகள் கல்லூரியை சேர்ந்த முதுகலை சமூக பணித்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், குடும்ப வன்முறை நாட்டில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த கனிமொழி எம்.பி., பெண்களின் வளர்சிக்கு தடையாக இருப்பதில் குடும்ப வன்முறை பிரதான இடத்தில் இருப்பதால் குறிப்பிட்டார். பெண் என்பதற்காக அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வக்கிர எண்ணத்துடன் செயல்படுபவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications