விஜயகாந்த் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்.. நலம் விசாரித்தார் ஸ்டாலின்.. தப்பில்லையே.. கனிமொழி
சென்னை: விஜயகாந்த்தை போய் முக ஸ்டாலின் சந்தித்துவிட்டு வந்ததில் ஒரு தப்பும் இல்லை என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
கூட்டணி இழுபறியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசி வருகின்றனர். இதில், திருநாவுக்கரசர், நடிகர் ரஜினியை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலினும் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் போனதுமே ஒட்டுமொத்த அரசியல் களமும் சூடானது. கூடவே பல விமர்சனங்களையும் தாங்கி வந்தது.

இவ்வளவு நாள் கேப்டனுக்கு உடம்பு சரியில்லைன்னு யாருக்கும் தெரியாதா? இன்னைக்குதான் எல்லோரும் போய் உடல்நலம் விசாரிக்கணுமா என்று கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இது சம்பந்தமாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை ஏர்போர்ட் வந்த கனிமொழியிடம் செய்தியாளர்கள் விஜயகாந்த்-ஸ்டாலின் சந்திப்பு குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு கனிமொழி, "தேமுதிக தலைவர் விஜயகாந்த் 'விஜயகாந்த் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இப்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தவரை விசாரிக்கவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று இருக்கலாம். இப்படி சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை" என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications