எந்தச் சூழலிலும் கொள்கைகளை முதல்வர் ஸ்டாலின் விட்டுக்கொடுக்க மாட்டார்... உறுதி கூறும் கனிமொழி..!
சென்னை: எந்தச் சூழலிலும் கொள்கைகளை முதல்வர் ஸ்டாலின் விட்டுக்கொடுக்க மாட்டார் என திமுக மகளிர் அணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார்.
புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

புற்றுநோய் சோதனை
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்று வந்த நிலையில் அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கனிமொழி எம்.பி., பெண்கள் தயக்கமின்றி மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகம் மட்டுமின்றி தேசியளவில் இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என கனிமொழி வேண்டுகோள் விடுத்தார்.

கல்விக் கொள்கை
அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட இன்னும் பல விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், புதியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒரு போதும் அமல்படுத்தாது என்றும் எதிர்க்கட்சியாக இருந்தபோதே இது குறித்து ஆராய்ந்து அதிலுள்ள பாதகங்களை பட்டியிலிட்டு புக்லெட் போட்டு திமுக எம்.பி.க்கள் மூலம் மத்திய அமைச்சரிடம் வழங்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் கனிமொழி கூறினார்.

வரவேற்பு
எனவே கொள்கையில் இருந்து ஒரு போதும் முதலமைச்சர் ஸ்டாலின் பின்வாங்கமாட்டார் என உறுதி கூறிய கனிமொழி எம்.பி., ஜூலை 18-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்கப்பட்டதை தாம் வரவேற்பதாக தெரிவித்தார். தமிழ்நாடு தமிழ்நாடாக மாறிய தினம் ஜூலை 18 என்பதால் முதலமைச்சர் சரியாக முடிவெடுத்திருக்கிறார் எனக் கூறினார்.

கனிமொழி விளக்கம்
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்துபோனதை கொண்டாடுவதை காட்டிலும் என்று மதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறியதோ அன்று கொண்டாடுவதே சிறந்தது என விளக்கம் அளித்தார். மேற்கொண்டு அரசியல் தொடர்பாக கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில், அதனை தவிர்த்த அவர் தாம் பங்கேற்ற நிகழ்ச்சி குறித்து மட்டும் கேட்குமாறு கோரிக்கை விடுத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications