சத்தமாக பேசுவதெல்லாம் உண்மையாகாது.. விஜய் சட்டமன்றத்தை சர்க்கஸ் கூடாரமாக்குகிறார்.. கனிமொழி சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்றைய நிகழ்வில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீதும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு புகார்களை குறிப்பிட்டார். இந்நிலையில் சத்தம் போட்டு பேசுவதெல்லாம் உண்மையாகிவிடாது.. சட்டமன்றத்தை விஜய் சர்கஸ் கூடாரமாக்குகிறார் என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஒரு பைசாவுக்கு தேறாத கமிஷன் ரிப்போர்ட்களை எடுத்து வந்து முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். 50 வருடங்களுக்கு முன்பே செல்லாது, அதை சட்டரீதியாக பயன்படுத்த முடியாது. நீதிமன்றத்திலும் கொடுக்க முடியாது என்கிற நிலையில் உள்ளதையெல்லாம் பேசுகிறார். இதை எந்த நீதிமன்றமே ஏற்காது.

Vijay Kanimozhi Assembly

கொச்சைப்படுத்திய விஜய்

நடவடிக்கையே எடுக்காத முடியாத ரிப்போர்ட்ஸ்களை படித்து, அதுதான் யுனிவர்ஸல் ட்ரூத் என்பது போல முதலமைச்சர் பேசுகிறார். மிசா எமர்ஜென்ஸியை கொச்சைப்படுத்துகிறார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் எத்தனை பேர் ஜனநாயக முறைப்படி அதை எதிர்த்து போராடி சிறை சென்றுள்ளனர். எவ்வளவு கஷ்டப்பட்டனர். தவெகவுடன் உள்ள கம்யூனிஸ்டுகள் எத்தனை பேர் சிறை சென்றனர் என்கிற வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

எதையுமே தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவதற்கு மட்டும் சட்டமன்றத்தை பயன்படுத்தும் மோசமான நிலை உள்ளது. மக்கள் இதற்கு தகுந்த பதிலை அவர்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். அதைத்தாண்டி கொஞ்சமாவது ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். தவெக தான் ஆட்சி பொறுப்பில் உள்ளது. அதை புரிந்துகொள்ளாமல் அடுத்தவர்களை குற்றம் சொல்லி வருகிறார்கள்.

பொறுப்பில்லாத முதல்வர்

சட்டமன்றத்தை கேலிக்கூத்தாக்குகிறார்கள். முதலமைச்சர் விஜய் அவரின் பேச்சு Lowest of the Low ஆக இருந்தது. மக்களாக பார்த்து திருந்தணும்.. மக்களாக தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஒரு முதலமைச்சர் பொறுப்பாக பேசுகிறாரா. அவர்கள் நிதியமைச்சர் சொன்னதை போல அன்புமொழி பேச வேண்டும் என்பதுதான் எல்லோரின் ஆசை. அந்தநாள் வரை எங்களை போன்ற சாதாரண மக்கள், அரசு எங்களை பாதுகாக்கும் என்று தான் நம்பும்.

மக்கள் மீது பழியை போட்டு, நீங்களே திருந்தணும் என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. அப்படியென்றால் அரசாங்கமே தேவையில்லையே. தவெகவுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவதூறு பேசுவதையே அரசியல் தகுதியாக எத்தனை காலம் வைத்து கொள்ள போகிறார்கள். முதலமைச்சருக்கு எதிர்வினை வந்துவிடும் என சபாநாயகர் விவாதத்தை தவிர்த்திருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் பிற மக்களின் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சட்டசபை, இன்றைக்கு சர்க்கஸ் கூடாரமாக மாறியுள்ளது. ஒன்று மட்டும் சொல்ல தோன்றுகிறது. Not Everything Loud is True" என்று கூறினார். கனிமொழியின் கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+