A2B ஓட்டலை டார்கெட் செய்த இந்துத்துவா..கோதாவில் குதித்த கனிமொழி! புது ஹேஷ்டேக் போட்டு ஓனருக்கு நன்றி
சென்னை: பெரியாரை போற்றியதற்காக அடையார் ஆனந்தபவன் உணவகம் மற்றும் அதன் உரிமையாளருக்கு எதிராக ஹேஷ்டேக்கை இந்துத்துவாவினர் டிரெண்ட் செய்து வரும் நிலையில், அந்த உணவகத்துக்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளார் திமுக எம்பி கனிமொழி.
தமிழ்நாட்டில் முன்னணி சைவ உணவகங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது அடையார் ஆனந்த பவன். A2B என இளைஞர்களாலும் ஆனந்த பவன் என பெரியவர்களாலும் அழைக்கப்படும் இந்த உணவகம் 1979 ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் முதலில் ஸ்ரீ ஆனந்தா என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ராஜபாளையத்தை சேர்ந்த திருப்பதி ராஜாவால் தொடங்கப்பட்ட இந்த உணவகம் தற்போது தமிழ்நாடு, வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 150 இடங்களில் கிளைகளை பரப்பி உள்ளது. 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த உணவகங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதன் உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா அண்மையில் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலில் பேட்டி ஒன்றை அளித்தார். நடிகர் சித்ரா லட்சுமணன், "ஒரு காலத்தில் இந்த சைவ உணவக தொழில் என்பது ஐயர்கள் கையில்தான் பெரும்பாலும் இருந்தது. அதன் பிறகுதான் மெல்ல மெல்ல மாறுதல் ஏற்பட்டது. எப்படி இந்த மாற்றம் நடந்தது?" என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த A2B உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா, "யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம் என்ற நிலை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் தான்.

தந்தை பெரியார்தான் குலத் தொழில் முறையை மாற்றிக் காட்டியவர் . எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னார். காலம் மாறுகிறது. அரசின் ஆதரவு கிடைக்கிறது. வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே செய்து வந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கடலில் யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம்." என்றார்.
Thank you for speaking the truth. #WillEatAtA2B pic.twitter.com/kysnJYsHLr
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 21, 2023
ஸ்ரீநிவாச ராஜாவின் இந்த வீடியோவை பெரியாரிய சிந்தனையாளர்கள், பொதுமக்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்து பெரியாரை போற்றி வந்தனர். அதேபோல் ஏ2பி உரிமையாளார் ராஜாவின் பேச்சையும் பலர் வரவேற்று இருந்தனர். இந்த நிலையில் இந்துத்துவா ஆதரவாளர்கள் A2B உணவகத்தை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் #BoycottA2B ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள். அந்த ஹேஷ்டேக்கின் கீழ் ஏ2பி உரிமையாளர் மீதும் பெரியார் மீதும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத விதமாக திமுக எம்பி கனிமொழி இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து ஏ2பி உரிமையாளருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து உள்ளார். "உண்மையை பேசியதற்கு நன்றி." என குறிப்பிட்டு உள்ள அவர், A2B உணவகத்தில் சாப்பிடுவோம் என்ற அர்த்தம் தரும் விதமாக #WillEatAtA2B என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டு உள்ளார். உடனே அந்த ஹேஷ்டேக்கை பலரும் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications